Notice: Function Elementor\Core\Experiments\Manager::warn_removed_or_hidden_dependency was called incorrectly. Feature mega-menu depends on hidden experiment nested-elements. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 4.3.5.) in /home/u416843817/domains/newsonetamilnadu.com/public_html/wp-includes/functions.php on line 6121
இந்திய பின்னலாடை உற்பத்தியில், திருப்பூர் சாதனை? - Newsone Tamilnadu
22 Tuesday, 2025
2:22 pm
உடனுக்குடன்
தமிழகத்தில் புதிய மழை எச்சரிக்கை பங்குச் சந்தையில் அதிகரிப்பு ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் புதிய திரைப்படம் 'கபாலி' வெளியீட்டு தேதி அறிவிப்பு
உடனுக்குடன்
5 இடைக்காலத் தடை
கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன! இப்ஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!
விராட் கோலி ஓய்வு அறிவிப்பு
5 இடைக்காலத் தடை
கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன! இப்ஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!

இந்திய பின்னலாடை உற்பத்தியில், திருப்பூர் சாதனை?

Spread the love

இந்தியா பின்னலாடை உற்பத்தியில் 2024-25 நிதியாண்டில் ரூ.40,000 கோடியைக் கடக்கும் என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவரும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (TEA) நிறுவனருமான ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.


உலகளாவிய ஆடை ஏற்றுமதிச் சந்தையில், 3.9 விழுக்காட்டுப் பங்குடன் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏற்றுமதி வருவாயைவிட இவ்வாண்டில் அதிகமாய் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


“உள்நாட்டு நுகர்வுக்கு ரூ.27,000 கோடி மதிப்புள்ள ஆடைகளை வழங்குவதுடன், 15 முதல் 18 விழுக்காடு என்ற அளவில் வளர்ந்துவரும் திருப்பூர், கடந்த ஆண்டு சுமார் ரூ.35,000 கோடி மதிப்பில் ஏற்றுமதி வருவாயைக் கொண்டிருந்தது. இவ்வாண்டில் ரூ.40,000 கோடியையும் கடக்கும்.


“பின்னலாடை ஏற்றுமதியில் 54 விழுக்காட்டுக்கும் அதிகமான பங்கைக் கொண்ட திருப்பூரில், கொரோனா தொற்று, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம், தொழிலாளர் பற்றாக்குறை, ரஷ்ய – உக்ரேன் மோதல், மேற்கத்திய சந்தைகளில் பொருளியல் மந்தநிலை முதலான பிரச்சனைகளால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.


“இருப்பினும், அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் மற்றும் வங்கதேசத்தில் நிலவும் அமைதியின்மை உள்ளிட்ட வர்த்தக இயக்கவியல் மாற்றத்தால், திருப்பூர் ஏற்றுமதியில் அதிக வாய்ப்புகள் கிடைக்கலாம்.


திருப்பூரின் உற்பத்தியில் 35 விழுக்காடு ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி நிறுவனங்களுக்கும், மற்றொரு 35 விழுக்காடு அமெரிக்காவுக்கும், சுமார் 10 விழுக்காடு மத்திய கிழக்கு மற்றும் கனடாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும், ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.