Notice: Function Elementor\Core\Experiments\Manager::warn_removed_or_hidden_dependency was called incorrectly. Feature mega-menu depends on hidden experiment nested-elements. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 4.3.6.) in /home/u416843817/domains/newsonetamilnadu.com/public_html/wp-includes/functions.php on line 6121
சிங்கப்பூரில் தமிழ் சாத்தியமா? - Newsone Tamilnadu
22 Tuesday, 2025
2:22 pm
உடனுக்குடன்
தமிழகத்தில் புதிய மழை எச்சரிக்கை பங்குச் சந்தையில் அதிகரிப்பு ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் புதிய திரைப்படம் 'கபாலி' வெளியீட்டு தேதி அறிவிப்பு
உடனுக்குடன்
5 இடைக்காலத் தடை
கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன! இப்ஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!
விராட் கோலி ஓய்வு அறிவிப்பு
5 இடைக்காலத் தடை
கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன! இப்ஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!

சிங்கப்பூரில் தமிழ் சாத்தியமா?

Spread the love

உயர்நிலைப்பள்ளிகளில் தமிழை இரண்டாவது மொழியாகப் பயிலும் மாணவர்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் தாங்கள் பயிலும் உயர்நிலைப்பள்ளியிலேயே அதனைக் கற்கின்றனர்.


எஞ்சியோர், வட்டார அடிப்படையில் மொழிக்கல்வி நிலையங்களாகச் செயல்படும் 11 பள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் அல்லது உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் தமிழ் பயில்வதாகத் திரு.சான் குறிப்பிட்டார்.


சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷுல்கர்னைன் அப்துல் ரஹிம், உயர்நிலைப் பள்ளிகளில் தாய்மொழி கற்றல் குறித்து எழுப்பிய கேள்விக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் திரு சான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்குச் சராசரியாக, குறிப்பிட்ட தாய்மொழியைப் பாடமாக வழங்காத உயர்நிலைப் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாறுவது தொடர்பில் எத்தனை விண்ணப்பங்கள் கல்வி அமைச்சுக்கு வருகின்றன என்று திரு.ஷுல்கர்னைன் கேட்டார்.
அத்துடன், கல்வியமைச்சு இந்த முறையீடுகளின் எண்ணிக்கையைக் கண்காணித்து, குறிப்பிட்ட தாய்மொழிப் பாடத்திற்கான தேவை பெருகும்போது அந்தப் பாடத்திற்குக் கூடுதல் வளங்களை ஏற்படுத்தித் தருமா என்றும் அவர் கேட்டிருந்தார்.


தற்போது, சீன, மலாய் மொழிகளைக் கற்கும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எல்லோரும் தாங்கள் படிக்கும் பள்ளிகளியேயே அம்மொழிகளைக் கற்கின்றனர். தமிழ் மொழிப்பாடம் எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும் இல்லை என்றாலும் பெரும்பாலான உயர்நிலைப் பள்ளிகளில் வழங்கப்படுகிறது.


“தமிழ் மொழி ஆசிரியர்களின் எண்ணிக்கை, குறைந்த அளவில் உள்ளது. சில பள்ளிகளில் தமிழுக்கான தேவையும் குறைவாக உள்ளது,” என்று அமைச்சர் சான் குறிப்பிட்டார்.
“தங்களது உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப்பாடம் வழங்கப்படாததால் மற்ற பள்ளிகளுக்கு மாறுவது தொடர்பில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்குச் சராசரியாக நான்கு விண்ணப்பங்களைக் கல்வியமைச்சு பெற்றுள்ளது,” என்று அவர் கூறினார்.
தங்கள் பள்ளியிலேயே தமிழ் மொழி கற்க இயலாத மாணவர்களுக்கான மொழிக்கல்வி நிலையங்கள், தமிழ் மொழியைப் புழங்குவதற்கான, செறிவான கற்றலுக்கான சூழலை வழங்குவதாக அமைச்சர் சொன்னார்.


“தாய்மொழி கற்றலைத் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே பெறும் நோக்கில் பள்ளி மாறுவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் போக்கைக் கல்வி அமைச்சு கண்காணித்து வருகிறது. ஆசிரியர்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையின்போதும் பணியமர்த்தும்போதும் அமைச்சு இதனைக் கருத்தில் கொள்கிறது. ஆயினும், சில பள்ளிகளில் தமிழ் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் மொழிப்பாடத்தை வழங்குவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது,” என்று திரு சான் விளக்கம் அளித்துள்ளார்.