
கொரோனா தொற்றுநோய் மக்களின் வாழ்க்கையில் பேரழிவு விளைவை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாது, ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளை அதிக ஆபத்துள்ள சூழ்நிலைகளில் வைத்திருப்பதன் மூலம் குடும்ப இயக்கவியலையும் மாற்றுகிறது. மேலும் குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்புக்கான மூல காரணமாகவும் உள்ளது. சிறிது நேரத்தில் உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. 190 நாடுகளில் 1.6 பில்லியன் மாணவர்களின் கல்வி இதுவரை பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் மாணவர் மக்கள் தொகையில் 90 சதவகிதம் ஆகும். பள்ளிகள் இல்லாததால் குழந்தையின் அன்றாட வழக்கம் தடைபட்டது மேலும் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரித்து வருகிறது, ஏனெனில் பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் புதிய மன அழுத்தத்தில் உள்ளனர், அவர்கள் தங்கள் வேலையை விட்டு விட வேண்டியிருக்கலாம். தொற்றுநோய்க்கு மத்தியில் இயக்கக் கட்டுப்பாடு உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து ஆதரவு அமைப்பு இல்லாததால் குழந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தொற்றுநோய் பரவுவதைக் குறைக்க அரசாங்கம் எடுத்த உடனடி நடவடிக்கைகளின் காரணமாக, உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தலில் உள்ளனர். இதில் துஷ்பிரயோகம், பாலின அடிப்படையிலான வன்முறை, சமூக விலக்கு மற்றும் பெற்றோர் மற்றும் பராமரிப்பாளரிடமிருந்து பிரித்தல் ஆகியவை அடங்கும். பெற்றோரின் மேற்பார்வை குறைக்கப்படுவதால் குழந்தைகள் வன்முறை, சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக நேரிடும்.
கோவிட்-19 பற்றிய அவப்பெயர், வன்முறை மற்றும் மன-சமூக அழுதங்களுக்கு ஆளாகும் அபாயத்தில் குழந்தைகளையே வைத்திருக்கிறது. ‘இந்த நோய் தற்போது குழந்தைகள் மற்றும் குடும்பங்களை நேரடியாகத் தாக்குவதை விட பல வழிகளில் நெருங்கி வருகிறது’ என்று யுனிசெஃப் குழந்தைகள் பாதுகாப்புத் தலைவர் கார்னேலியஸ் வில்லியம்ஸ் கூறினார். தொற்று நோய் வெடிப்புகளின் போது, நோய், மரணம் அல்லது உளவியல் துயரம் காரணமாக பராமரிப்பாளர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பராமரிப்பு வழங்க முடியாமல் போகலாம் கடந்த பொது சுகாதார அவசரநிலைகளிலும் இதே நிலைதான் நடந்தது. 2014 முதல் 2016 வரை மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் நோய் பறவியதால் பள்ளிகள் மூடப்பட்டன, அதன் விளைவாக குழந்தைத் தொழிலாளர், புறக்கணிப்பு, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் டீனேஜ் கர்பங்கள் ஏற்ப்பட்டன. சியாரா லியோனில் டீனேஜ் கர்ப்பங்களின் வழக்குகள் 14000 ஆக அதிகரித்தன. ஏனெனில் இது வெடிப்புக்கு முந்தைய எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
குழந்தை பாதுகாப்பு சிக்கல்கள்:
பராமரிப்பாளர்களிடமிருந்து குழந்தைகள் பிரிக்கப்படுவது, பராமரிப்பாளரின் மரணம் அல்லது இயலாமை காரயமாகவோ அல்லது பெற்றோர்களால் பாதிக்கப்படாத பகுதிகளுக்கு மற்ற குடும்ப உறுப்பினர்களிடம் குழந்தைகளை அனுப்பி வைப்பதன் காரணமாகவோ ஏற்படுகிறது. டெல்லியின் கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனையில் இரண்டு வயது சிறுவனுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இரவைக் கழித்தார்.
நோய் தொற்று குறித்த பயம் அல்லது பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் மரணம் அல்லது நோய் காரணமாக உளவியல் துயரம் ஏற்படுகிறது. பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட இரண்டு முதல் மூன்று வயது குழந்தைகள், பெற்றோர் தனிமைப்படுத்தலில் இருந்து திரும்பிய பிறகு தீவிரமான ஒட்டிக்கொள்வதன் மூலம் பதட்டத்தின் அறிகுறிகளைக் காட்டுகிறார்கள் ‘ஒரு தாய் தனது குழந்தை தன்னை குளியலறைக்கு கூட செல்ல விடுவதில்லை’ என்று என்னிடம் கூறினார். மூன்று முதல் ஆறு வயது வரையிலான சற்று வயதான குழந்தைகளில் ‘நான் ஏதாவது தவறு செய்தேனா என் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேற்றினார்கள்’ என்பது ஒரு பொதுவான எண்ணம்’ என்று ஒரு மருத்துவர் கூறினார்.

பராமரிப்பாளரின் மரணம் நோய் காரணமாக பாலியல் வன்முறை ஏற்படுகிறது, இது குடும்பப் பாதுகாப்பைக் குறைக்கிறது. பல நாடுகள் வீட்டு மற்றும் பாலியல் வன்முறை வழக்குகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளின் அதிகரிப்பு இருப்பதாகப் புகாரளிக்கின்றன. கோவிட்-19 தொற்றுநோய் வந்ததிலிருந்து கென்யாவில் நடந்த அனைத்து குற்றங்களிலும் மூன்றில் ஒரு பங்கு பாலியல் வன்முறையுடன் தொடர்புடையது.
பராமரிப்பாளரின் மரணம் அல்லது நோய் காரணமாக வீட்டு வருமான இழுப்பு காரணமாக குழந்தைதத் தொழிலாளர்கள் உள்ளனர். தொற்றுநோய் காரணமாக மில்லியன் கணக்கான குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களால் பாதிக்கப்படுகின்றனர். 2025 ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டுவர உறுதிபூண்டுள்ள உலகம் நெருக்கடியின் காரணமாக கடினமாகிவிடும். 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு குழந்தைத தொழிலாளர்களில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசிலில் நிதி நெருக்கடி காரணமாக பெற்றோரின் வேலையின்மை, குறுகிய கால ஆதரவை வழங்குவதற்காக குழந்தைகளை வெளியே செல்ல வழிவகுத்துள்ளது.
சமூக விலக்கு என்பது பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை சமூக ரீதியாக களங்கப்படுத்துவதால் ஏற்படுகிறது. கோவிட்-19 ஆல் ஏற்படும் சமூக நெருக்கடி, கொள்கை மூலம் முறையாகக் கவனிக்கப்படாவிட்டால், நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு சமத்துவமின்மை, விலக்கு, பாகுபாடு மற்றும் உலகலாவிய வேலையின்மை ஆகியவற்றை அதிகரிக்கும் வாய்ப்புகளையும் கொண்டுள்ளது.
பராமரிப்பாளரின் மரணம் அல்லது நோய் அல்லது பரவும் பயம் காரணமாக கைவிடப்பட்டதால் புறக்கணிப்பு ஏற்பபடுகிறது. ‘குழந்தைகளின் உணர்ச்சித் தேவைகள் தற்போது முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன.’ என்று ராபா கூறுகிறார். நோயை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது குறித்த உடல் ரீதியான விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கு போதுமான பொருட்கள் வழங்கப்பட்டாலும் காலத்தின் தேவையாக இருக்கும் மன அழுத்தத்தைச் சமாளிக்கும் போது அவர்களுக்கு மிகக் குறைந்த ஆதரவுதான் கிடைக்கிறது.
உடல் ரீதியான வன்முறை என்பது பராமரிப்பாளரின் மரணம் அல்லது நோய் காரணமாக வீட்டு வருமான இழப்பின் விளைவாகும், இது குடும்ப பதட்டங்களை அதிகரிக்கிறது. இது வீட்டு வன்முறைக்கு வழிவகுக்கிறது. இந்த தொற்றுநோய் காலத்தில் பெற்றோர்கள் மைனர் பெண்களை திருமணம் செய்யத் தயாராக இருப்பதால் இளம் பெண்கள் உடல் ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார்கள். திருமணங்களைத் தவிர்க்க முயற்சிக்கும் பெண்கள் தங்கள் வீடுகளில் உடல் ரீதியான வன்முறையை எதிர்கொள்கிறார்கள், ஆனால் ஊரட்ங்கு காரணமாக உதவி எண்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
தொற்றுநோய் காலத்தில் குழந்தை பாதுகாப்பு (மைக்ரோ அளவில்-பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்கள்)
குறிப்பாக இந்த தொற்றுநோய் சூழ்நிலைகளில் குழந்தைகள் பின்பற்ற வேண்டிய அடிப்படை செயல்களைப் பற்றி பெற்றோர்கள் நினைவூட்டுவது முக்கியம், அதாவது அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுதல், முகத்தைத் தொடாமல் இருப்பது மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் போன்றவை தங்களையும் தங்கள் சமூகத்தையும் பாதுகாக்க உதவும்.
பேசுங்கள், கேளுங்கள்: குழந்தைகளிடம் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிப் பேசச் சொல்லுங்கள் என்பதை வெளிப்படுத்தட்டும், இதனால் அவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும்.
கொரோனாவுக்கு ஓய்வு நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகளில் பயத்தை ஏற்படுத்தக்கூடிய கொரோனா உரையாடல்கள் ஒவ்வோரு முறையும் ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுகள் விளையாடச் சொல்லுங்கள், கேட்கச் சொல்லுங்கள், இசை சொல்லச் சொல்லுங்கள். குடும்பம் சம்பாதிக்கும் வருமானம் தொடர்பான விஷயங்கள் மிகவும் கடினமாக இருந்தால், குழந்தைகள் முதலில் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேக்ரோ மட்டத்தில் (அரசு):
பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் தடுப்பு மற்றும் பிரச்சனைகளை எவ்வாறு பாதுகாப்பாகப் புகாரளிப்பது உள்ளிட்ட தொற்றுநோய் தொடர்பான குழந்தை பாதுகாப்பு அபாயங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பரிந்துரை பாதைகளை உருவாக்க வேண்டும் மற்றும் பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்கள் சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு உளவியல் ஆதரவு வழங்கப்பட வேண்டும். அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவது சுற்றுப்புற மருத்துவச்சிகள் மற்றும் பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பை வழங்கும் செவிலியர்கள் மூலம் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.
தொற்றுநோய்க்கு மத்தியில் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு நிதி மற்றும் பொருள் சார்ந்த ஆதரவு வழங்கப்பட வேண்டும், இது குழந்தைகளுக்கு மறைமுகமாக உதவியாக இருக்கும். பள்ளிகள் மூடப்பட்டதால், அரசாங்கம் தொலைதூர உள்ளடக்த்தை (தொலைக்காட்சியில், ஆன்லைனில் வகுப்புகள்) உருவாக்கி, ஒளிபரப்பி, வெளியிட வேண்டும், வீட்டுப் படிப்புக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் பணிப்புத்தபங்களை அச்சிட்டு பாதுகாப்பாக விநியோகிக்க வேண்டும்.
இந்த தொற்றுநோய், குழந்தையின் எதிர்காலத்தை, கல்வி வெற்றி முதல் சமூகத் திறன்கள் வரை, குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அவர்களின் மன ஆரோக்கியத்தையும் பாதித்துள்ளது. குழந்தையைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும். ஏனெனில், இந்த வீழ்ச்சி அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களை விட்டுச் செல்லாமல் போகலாம். குழந்தையின் நலனை அடைவதே குழந்தையைப் பாதுகாப்பதன் மூலமும் இந்த தொற்றுநோய் சூழ்நிலைகளில் அவர்களுக்கு அதிக முன்னுரிமை அளிப்பதன் மூலமும் அடைய முடியும்.
நவ்யா கெடேலா, லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தில் மனித மேம்பாடு மற்றும் குடும்ப ஆய்வுகள் துறையில் ஆராய்ச்சி அறிஞராக உள்ளனர். தேசிய திறமை உதவித்தொகை விருது பெற்றவர்.