இந்த சாம்பியன்ஸ் டிராபி, தொடர் ஒருநாள் போட்டி ஃபார்மெட்டில் நடத்தப்படுகிறது. 2008-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டது, ஆனால் பாதுகாப்பு காரணங்களால் எந்த அணியும் விளையாட முன்வரவில்லை என்பதால் 2009-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் அந்த தொடர் நடத்தப்பட்டது.

2021-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டடது. ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக அது பின்னர் டி20 உலகக் கோப்பையாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது.
2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் முதல் 7 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறும் என ஐசிசி அறிவித்தது. போட்டியை நடத்தும் பாகிஸ்தான் தானாகவே தகுதி பெற்றுவிடும் என்றும் அறிவிக்கப்பட்டது.
பரிசுத்தொகை எவ்வளவு?
இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு 60 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த முறை நடந்த சாம்பியன்ஸ் டிராபி பரிசுத்தொகையை விட 53 சதவீதம் அதிகமாகும்.

ஐசிசி அறிவிப்பின்படி, இந்திய மதிப்பில் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகையை சாம்பியன் பட்டம் வெல்லும் அணி பெறும்.
2வது இடம் பிடிக்கும் அணி இந்திய மதிப்பில் 9.12 கோடி ரூபாயை பரிசுத் தொகையாகப் பெறும்.
அரையிறுதியுடன் வெளியேறும் இரு அணிகளுக்கும் 4.86 கோடி ரூபாய் பரிசு கிடைக்கும்.
சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் 8 அணிகளுக்கும் பங்கேற்பு உறுதித்தொகையான தலா 1.08 கோடி ரூபாயும் வழங்கப்படும்.