22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

ஹிந்தி, மராத்தி, தமிழ் போன்ற பிராந்திய மொழிகளில் ஏஐ மாதிரிகளைப் பயிற்றுவிக்கத் தேவையான உயர்தர தரவுத் தொகுப்புகள் இல்லாததால், குறிப்பாக இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையின் அடிப்படையில், இந்தியா அனைத்து சவால்களையும் மீறி, திறமையின் அடிப்படையில் சிறப்பாகச் செயல்படுகிறது. ஏனெனில் உலகின் ஏஐ பணியாளர்களில் 15 சதவீதத்தினர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.


ஆனாலும், பிரச்சனை என்னவென்றால், ஏஐ திறமை உள்ளவர்களின் இடப்பெயர்வு குறித்த ஸ்டான்ஃபோர்டின் ஆராய்ச்சி, திறமையான வல்லுநர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதைக் காட்டுகிறது.


ஏஐ மாதிரிகளை பழைய, குறைந்த விலையுள்ள சிப்களை பயன்படுத்தி உருவாக்க முடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ள டீப்சீக்கன் வெற்றி இந்தியாவுக்கும் உறுதியளிக்கிறது.
ஆனால், தொழிற்துறை மற்றும் அரசாங்கத்திடம் இருந்து “நீண்ட கால மற்றும் நிலையான” முதலீடு கிடைக்காதது ஒரு பெரிய பிரச்சனை.


இந்தியாவில் 200 தொடக்கநிலை நிறுவனங்கள் ஜெனரேட்டிவ் ஏஐ தொடர்பாக வேலை செய்வதால், தொழில் முனைவோர் இதில் ஆர்வமாகச் செயல்படுவதையும் அறிய முடிகிறது.
வெற்றிக்குத் தேவையான முக்கிய காரணிகள் இந்தியாவிடம் உள்ள போதிலும், கல்வி, ஆராய்ச்சி மற்றும் அரசாங்கக் கொள்கைகளில் அடிப்படை மேம்பாடுகளைச் செய்யலாவிட்டால் பின்தங்க நேரிடலாம்.


செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்ததுவதற்கான உலகளாவிய போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், குறிப்பாக சாட்பாட்களை இயக்குவதற்குத் தேவையான அதன் சொந்த அடிப்படை மொழி மாதிரியை உருவாக்குவதில் இந்தியா பின்தங்கியுள்ளதாக அறியப்படுகிறது.