வளைகுடா நாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவதற்கு மிகப்பெரிய காரணம் அங்கு அதன் விலை குறைவாக இருப்பதே ஆகும். அங்கு தங்கத்துக்கு அரசு வரி விதிப்பதில்லை. இதனால் அதன் விலை குறைவாக உள்ளது.

இந்தியாவை எடுத்துக்கொண்டால் இங்கு தங்கத்தின் மீதான வரி மிக அதிகம். இதன் காரணமாக, தங்கத்தின் விலை உண்மையான விலையை விட அதிகமாக உள்ளது.
குறைந்த விலையில் தங்கத்தை வாங்கி இந்தியாவில் விற்க வேண்டும் என்ற பேராசை கடத்தலுக்கு வழி வகுக்கிறது.
மிக அதிக அளவு கடத்தல் தங்கம் எங்கிருந்து வருகிறது?
பெருமளவு கடத்தல் தங்கம் வளைகுடா நாடுகளிலிருந்தே இந்தியாவுக்கு வருகிறது.
நாட்டின் பெரும்பங்கு கடத்தல் தங்கம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வருகிறது. இதையடுத்து, மியான்மர் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தவிர சில ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் கடத்தல்காரர்கள் தங்கம் கொண்டு வருகிறார்கள்.

கடத்தல் தங்கத்தில் 10 சதவிகிதம் மட்டுமே பிடிபடுகிறது என்று டிஆர்ஐ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2023-24-ல் சிபிஐசி சுமார் 4,869.6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது.
மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தங்கக் கடத்தலில் முன்னணியில் உள்ளன. சுமார் 60 சதவிகித கடத்தல் வழக்குகள் இங்குதான் பதிவு செய்யப்படுகின்றன.
இறக்குமதி வரியை 15ல் இருந்து 6 சதவிகிதமாக குறைத்த பிறகு கடத்தல் குறைந்துள்ளது என்று தங்கக் கடத்தல் தொடர்பாக சிபிஐசி தலைவர் சஞ்சய் குமார் அகர்வால் சமீபத்தில் தெரிவித்தார்.
தங்கம் கடத்தும் போது ஒருவர் பிடிபட்டால் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 லட்சம் ரூபாய் அபராதம், ஆயுள் தண்டனை மற்றும் வெளிநாடு செல்ல வாழ்நாள் தடையும் விதிக்கப்படலாம்.