
வனத்துறையில் uகாலியாக உள்ள உதவி வனப் பாதுகாவலர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Assistant Conservator (Forest).
வயது: 01.07.2025 தேதியின்படி 21 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/ முஸ்லிம் பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு பொதுப்பிரிவு எனில் 50 வயது வரையிலும், இதர பிரிவினருக்கு 55 வயது வரையிலும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: Forestry/Botany/Zoology/Physics/Chemistry/Mathematics/ Statistics/ Geology/Agriculture/Horticulture/Engineering/Computer Applications/Environmental Science/ Veterinary Science ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆண்கள் குறைந்தது 163 செ.மீ., உயரமும், பெண்கள் 150 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும்.ஆண்களின் மார்பளவு சாதாரண நிலையில் 84 செ.மீ., அகலமும், விரிவடைந்த நிலையில் 89 செ.மீ., அகலமும், பெண்களுக்கு சாதாரண நிலையில் 79 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 84 செ.மீ.,யும் இருக்க வேண்டும்.
சம்பளம்: தமிழக அரசின் விதிமுறைப்படி வழங்கப்படும்.
கொள்குறி வகை கேள்விகளைக் கொண்ட எழுத்துத் தேர்வு, விரிவாக விடையளிக்கும் வகையிலான எழுத்துத் தேர்வு, தமிழ் மொழி திறனறியும் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். முதல் நிலை எழுத்துத் தேர்வு ஜூன் 15ல் நடைபெறும்.
முதற்கட்ட தேர்வில் (Preliminary) பொதுஅறிவு, கணிதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் கட்ட பிரதான தேர்வில் (Main Exam) பொது அறிவு மற்றும் தமிழ்மொழி திறனறியும் கேள்விகள் இடம் பெறும். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் பற்றிய கூடுதல் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தொடர்பான கூடுதல் விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். எழுத்துத் தேர்வு மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும்.
முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதுபற்றி விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். மெயின் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்க்ப்படுவர். நேர்முகத் தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். முறையான கல்வித் திட்டத்தின் கீழ் பட்டம் பெற்றவர்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்கவும்.
கட்டணம்: முதல் நிலை தேர்வுக்கு ரூ.100/-. பிரதான தேர்வுக்கு ரூ.200/-. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி யினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2025.