22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

பந்துவீச்சில் ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளார் முகமது ஷமி. அதுமட்டுமல்லாமல், வேகமாக 200 விக்கெட்டுகளை எட்டிய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஷமி பெற்றார்.


102 போட்டிகளில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க், அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். ஷமி, 104 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி 2-வது இடத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்டாக்குடன் இடத்தைப் பகிர்ந்துள்ளார்.


இந்த 200 விக்கெட்டுகளை வீழ்த்த ஷமி 5126 பந்துகளை வீசியுள்ளார். ஆனால், ஸ்டார்க் 5240 பந்துகளை வீசித்தான் 200 விக்கெட்டுகளை சாய்த்தார்.


வங்கதேசத்தின் 10 விக்கெட்டுகளில் 8 விக்கெட்டுகளை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமதுஷமி, ஹர்சித் ராணா இருவரும் பகிர்ந்துகொண்டனர். ஷமி 10 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், ராணா 7.4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.