
சென்னை: இந்தியாவில் மிடில் கிளாஸ் கடன் மோசமாக உள்ளது. அவர்கள் தங்களுக்கு வரப்போகும் ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள். தங்களுக்கு என்ன நடக்க போகிறது என்பது அவர்களுக்கு இன்னமும் தெரியவில்லை, என்று போர்ட்ஃபோலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனர் சவுரப் முகர்ஜி எச்சரித்து உள்ளார்.
போர்ட்ஃபோலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனர் சவுரப் முகர்ஜி விடுத்துள்ள எச்சரிக்கையில், உலகம் முழுக்க வேலை இழப்புகள் மோசமாகி வருகின்றன. இந்தியாவில் அந்த அளவிற்கு இல்லை. அதாவது இந்தியாவில் 18-25 வயது உள்ளவர்களுக்கு சிக்கல் இல்லை. அவர்களுக்கு குறைந்த சம்பளத்தில் கூட வேலைகள் கிடைக்கும். ஆனால் 30 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் பெரிய சிக்கல். ஆம் 30 வயதை தாண்டியவர்கள் வேலை இழப்புகளை சந்திக்கலாம்.
இந்தியாவில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் வேலை இழப்புகள் ஏற்படலாம். ஆனால் அதை இந்தியர்கள் சரியாக திட்டமிடவில்லை. தங்களின் பொருளாதாரத்தை சரியாக திட்டமிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் மிடில் கிளாஸ் மக்கள் கடனில் இருக்கிறார்கள். மிடில் கிளாஸ் கடன் என்பது இந்தியாவிலேயே மிக மோசமான விஷயம்.
மிடில் கிளாஸ்களுக்கு சிக்கல் மற்ற நாடுகளில் மிடில் கிளாஸ் மக்கள் கொஞ்சம் சேமிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மிடில் கிளாஸ் கடன் மோசமாக உள்ளது. அவர்கள் தங்களுக்கு வரப்போகும் ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள். தங்களுக்கு என்ன நடக்க போகிறது என்பது அவர்களுக்கு இன்னமும் தெரியவில்லை. நிலைமை மோசமாக போகிறது என்பதை அவர்கள் இன்னமும் உணராமல் இருக்கிறார்கள்.
கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான கடனில் இருக்கிறார்கள் மிடில் கிளாஸ் மக்கள். இதை பற்றி யாரும் பேசுவது இல்லை. மக்கள் பலர் செய்யும் பணிகள், குறிப்பாக HR போன்ற துறைகள் AI மூலம் கடுமையாக பாதிக்கப்படும். முதலில் IT சேவை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், பின்னர் ஊடக நிறுவனங்கள் போன்றவை மாற்றப்படும். நிலையான அலுவலக வேலைகள் இனி இருக்காது. ஃப்ரீலான்ஸ், கிக் அடிப்படையிலான வேலைகளுக்கு நிறுவனங்கள் விரைவாக மாறக்கூடும்.. அடுத்த 1-3 ஆண்டுகளில் மக்கள் இதற்கான தயாரிப்புகளை செய்ய வேண்டும், என்று போர்ட்ஃபோலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனர் சவுரப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
முன்பே எச்சரிக்கை முன்பே அவர் விடுத்த எச்சரிக்கையில், இந்தியாவின் நடுத்தர வர்க்கக் கதை முடிவுக்கு வரப்போகிறது. இந்தியா ஒரு புதிய பொருளாதார கட்டத்தில் நுழைந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் நடக்க போகின்றன. சம்பளத்தை அடிப்படையாக.. அதாவது மாத வருமானத்தை அடிப்படையாக வைத்து வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட போகிறார்கள். படிப்பு, கடின உழைப்பு, மாத பட்ஜெட்டை மட்டும் நம்பி வாழும் மக்கள் பாதிக்கப்பட போகிறார்கள். அந்த எண்ணிக்கை குறையும். அல்லது அழியும். உங்கள் பெற்றோர்கள் ஒரு நிறுவனத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றி அதன்பின் ரிட்டையர் ஆகுவார்கள்.
இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தை கட்டியெழுப்பிய அந்த பழைய முறை இனி தொடராது. ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து, சம்பள உயர்வை குறிவைத்து பணியாற்றி, வரும் வருமானத்தில் சிலவற்றை சேமித்து வாழ்க்கை நடத்தும் காலம் இனி இருக்காது. அந்த பிரிவு வெகுவாக குறையும். முக்கியமாக கடின உழைப்பாளிகள் ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக ஒயிட் காலர் தொழிலாளர்கள் செய்ய வேண்டியவற்றில் பெரும்பாலானவை இப்போது AI ஆல் செய்யப்படுகின்றன. கூகிள் அதன் கோடிங்கில் மூன்றில் ஒரு பங்கு ஏற்கனவே AI மூலம் செய்யப்படுகிறது என்று கூறுகிறது. இது இந்திய தகவல் தொழில்நுட்ப துறையையே மாற்ற போகிறது. இந்த துறையை நம்பி இருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட போகிறார்கள். இனிமேல் தொழில் தொடங்குவதுதான எதிர்காலம். பலரும் அதை நோக்கி நகருவார்கள். இதனால் ஏழைகள் – பணக்காரர்கள் இடையே வேறுபாடு அதிகரிக்கும். ஒன்று ஏழைகள் அதிகம் இருப்பார்கள். இல்லை பணக்காரர்கள் அதிகம் இருப்பார்கள். மிடில் கிளாஸ் என்ற இனம் இருக்காது, என்று எச்சரித்து உள்ளார்..