22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

இரவு உணவு உடலுக்கு மிக முக்கியம். இரவு உணவு ஆரோக்கியமானதாக எடுத்துக் கொள்ளும்போது தான் அது நல்ல தூக்கத்தையும் உடல் எடையைச் சீராக வைத்திருக்கவும் உதவி செய்யும். நம்மில் பெரும்பாலானவர்கள் இரவு உணவு என்றாலே தோசை, சப்பாத்தி என்று தான் சாப்பிடுகிறோம். ஆனால் இரவு உணவு புரதங்கள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் ஆகியவை சேர்ந்ததாக இருக்க வேண்டும். அப்படி சாப்பிடும்போது உடல் எடையும் கட்டுப்பாட்டுக்குள் வரும், மெட்டபாலிசமும் சீராக இருக்கும். அப்படி பெஸ்ட் 5 இரவு உணவுகளை இங்கே பார்க்கலாம்.


இரவு உணவு செரிமானத்தை சீராக்கும். நல்ல தூக்கத்திற்கு உதவும். உடல் எடையை கட்டுக்குள் வைக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவில் வைக்க உதவும். தசைகள் வலுப்பெறவும் இது உதவும். இரவு உணவு சாப்பிடாமல் இருப்பது மட்டுமின்றி தவறான உணவுகளை எடுத்துக் கொள்வதும் கூட உடலுக்கு ஆபத்து தான். அதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது நல்லது. எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும், இரவில் எடுத்துக் கொள்வதற்கான சிறந்த உணவுகள் என்னென்ன என்று பார்ப்போம் வாங்க

இரவு உணவு ஏன் முக்கியம்?

​இரவு உணவு

என்பது வெறும் வயிற்றை நிரப்பவும் எனர்ஜியையும் மட்டும் கொடுப்பதற்கு அல்ல. அவை நம் உடலின் பல செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வேலையைச் செய்கிறது.

வளர்சிதை மாற்றம், செரிமானம், தூக்கம் மற்றும் உடல் எடை போன்றவற்றை கட்டுப்படுத்தி உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை சீராக்கும்.

இரவு உணவு சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும்?

இரவில் உணவு சாப்பிடாமல் படுத்தால் நடு இரவில் பசி எடுக்கும்.

உடல் எடையை அதிகரிக்கும். எனவே, இரவு உணவை தவிர்க்கக் கூடாது. அதே சமயம், அதிகப்படியான உணவு சாப்பிடுவதும் தவறு.

புரதம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். இந்த சத்துக்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். செரிமானத்திற்கும் உதவும்.

உடல் எடையை குறைக்கவும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் இரவில் என்ன சாப்பிடலாம்?

1. பருப்பு சூப் மற்றும் மல்டி கிரெய்ன் டோஸ்ட்

இரவு நேரத்தில் எடுத்துக் கொள்ள மிகச்சிறந்த உணவு என்று சூப் வகைகளைக் குறிப்பிடலாம். அதிலும் பருப்பு சூப் மிகவும் நல்லது. அதில் புரதங்களும் நார்ச்சத்துக்களும் அதிகமாக கிடைக்கும்.

அதோடு சேர்த்து மல்டி கிரெய்ன் பிரட் டோஸ்ட் 2 எடுத்துக் கொள்ளலாம். இதை சாப்பிடும்போது நிறைய புரதங்களும் நார்ச்சத்துக்களும் கிடைக்கும். அதோடு இரவில் பசி எடுப்பதைத் தடுக்கும்.

மீன் மற்றும் காய்கறிகள்

​மீன் மற்றும் காய்கறிகள் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது மூளையின் செயல்பாட்டுக்கும் நல்லது.

இந்த கடல் உணவுகள் உடலில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களைக் குறைக்கும். கீன்வா தானியத்தில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் தான் இருக்கிறது. அதோடு உங்களுக்குப் பிடித்த நிறைய காய்கறிகள் சேர்த்து நார்ச்சத்தும் வைட்டமின்களும் நிறைந்ததாக மாற்றுங்கள். இதைவிட பெஸ்ட் டின்னர் இருக்கவே முடியாது.

காய்கறி மற்றும் பனீர் மற்றும் பிரௌன் ரைஸ்

முடிந்தவரையில் இரவில் அரிசி எடுக்காதீர்கள். ஆனால் வழக்கமான இட்லி, தோசை, சப்பாத்தியை சாப்பிடுவதை விட பிரௌன் ரைஸ் மிக மிகச்சிறந்தது என்று சொல்லலாம்.

ஆனால் பிரௌன் ரைஸோடு நிறைய காய்கறிகள், பனீர் ஆகியவற்றைச் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இது ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும். காலை நேர ரத்த சர்க்கரையைக் கூட்டாமல் தடுக்கும்.

தயிர், நட்ஸ் மற்றும் விதைகள்

ஆயுர்வேதத்தில் இரவு நேரத்தில் தயிர் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள்.

ஆனால் அறிவியல் ஆய்வுகள் இரவில் யோகர்ட் எடுத்துக் கொள்வது குடல் இயக்கத்துக்கு நல்லது.

யோகர்ட்டுடன் சேர்த்து நட்ஸ் மற்றும் விதைகள் ஆகியவற்றைச் சேர்த்து இரவு உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

இது புரதங்கள் மற்றும் ப்ரோ பயோடிக் பண்புகள் நிறைந்து இருக்கின்றன. அதோடு இதிலுள்ள மெக்னீசியம் இரவில் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.

நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட நம் உடலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம். நாம் இரவு நேரத்தில் சரியான உணவைத் தேர்வு செய்து சாப்பிடுவதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படும் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். உடலுக்குத் தேவையான ஆற்றலும் கிடைக்கும். ஒட்டுமொத்த மெட்டபாலிசமும் மேம்படும்.