22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

அமெரிக்காவின் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய இரு நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீத வரிகளை டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார்.


இவை முதலில் பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கவிருந்தன. ஆனால் இறுதியாக மார்ச் 4-ஆம் தேதி தொடங்கப்பட்டன.


இதற்கிடையில், கனடா எரிசக்தி இறக்குமதிகள் 10 சதவீத வரியை எதிர்கொள்கின்றன.
வரி விதிப்பு நடவடிக்கைகளின் ஒரு மாத கால தாமதம், “கனடாவுடன் இறுதிப் பொருளாதார ஒப்பந்தத்தை எட்ட முடியுமா இல்லையா” என்பதை அமெரிக்கா தெரிந்துகொள்ள அனுமதிக்கும் என்று டிரம்ப் முன்பு கூறியிருந்தார்.


பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வரிகள் “மிகவும் முட்டாள்தனமான செயல்” என்று விமர்சித்தார், மேலும் டிரம்ப் “கனடாவின் பொருளாதாரத்தை முழுமையாக முடக்க திட்டமிட்டு உள்ளார். ஏனெனில் அது எங்கள் நாட்டை அமெரிக்காவுடன் இணைப்பதை எளிதாக்கும்” என்றும் குற்றம் சாட்டினார்.


மேலும், தனது நாடு அமெரிக்காவிலிருந்து வரும் 30 பில்லியன் கனடா டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு உடனடியாக வரி விதிக்கும் என்றும், 21 நாட்களில் 125 பில்லியன் கனடா டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு வரி விதிக்கும் என்றும் அவர் கூறினார்.


அது மட்டுமின்றி, அமெரிக்கா தனது மின்சாரம் மற்றும் எண்ணெய்யை அணுகுவதையும் கனடா கட்டுப்படுத்தலாம். கனடா அமெரிக்காவிற்கு அதிக எண்ணெய் வழங்கும் நாடாகவும் 30 சதவீத மாகாணங்களுக்கு மின்சாரம் வழங்கும் நாடாகவும் உள்ளது.


மிஷகன், நியூயார்க் மற்றும் மினசோட்டா ஆகிய மூன்று அமெரிக்க மாகாணங்களுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும்போது 25 சதவீத கூடுதல் கட்டணத்தை அமல்படுத்துவதாக ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக்ஃபோர்ட் கூறினார்.


மேலும் அமெரிக்க வரிகள் அதிகரித்தால், அந்த மாகாணங்களுக்கான கனடாவின் மின் விநியோகத்தை முற்றிலும் துண்டிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் அவர் கூறினார்.