Notice: Function Elementor\Core\Experiments\Manager::warn_removed_or_hidden_dependency was called incorrectly. Feature mega-menu depends on hidden experiment nested-elements. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 4.3.5.) in /home/u416843817/domains/newsonetamilnadu.com/public_html/wp-includes/functions.php on line 6121
கிரிக்கெட் தான் தனக்கான பி.ஆர்.ஏஜெண்ட் – ரஹானே பேட்டி! - Newsone Tamilnadu
22 Tuesday, 2025
2:22 pm
உடனுக்குடன்
தமிழகத்தில் புதிய மழை எச்சரிக்கை பங்குச் சந்தையில் அதிகரிப்பு ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் புதிய திரைப்படம் 'கபாலி' வெளியீட்டு தேதி அறிவிப்பு
உடனுக்குடன்
5 இடைக்காலத் தடை
கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன! இப்ஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!
விராட் கோலி ஓய்வு அறிவிப்பு
5 இடைக்காலத் தடை
கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன! இப்ஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!

கிரிக்கெட் தான் தனக்கான பி.ஆர்.ஏஜெண்ட் – ரஹானே பேட்டி!

Spread the love

ரஹானே, கிரிக்கெட் தான் தனக்கான பி.ஆர்.ஏஜெண்ட் என்று கூறியுள்ளது அதிசயிக்க வைக்கிறது. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறும்போது, நடந்து முடிந்த பார்டர். கவாஸ்கர் டிராபியை வீட்டில் உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சியில் பார்த்தது மிகவும் வேதனையாகவும், கடினமாகவும் இருந்தது என்று கூறியுள்ளார்.


“நான் ரொம்ப கூச்ச சுபாவியாகவே இருந்தேன். அதிகம் பேச மாட்டேன். என் கவனமெல்லாம் கிரிக்கெட் தான், கிரிக்கெட் ஆடு, வீட்டுக்குப் போ என்பதுதான் என் தாரக மந்திரமாக இருந்து வந்தது. ஆனால், இப்போது நாம் வாயைத் திறந்து குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக எழுந்துள்ளது.


என்னுடைய கடின உழைப்பைப் பற்றி நான் பேசியாக வேண்டும். அனைவரும் நான் செய்தியில் அடிக்கடி இடம்பெற வேண்டும், செய்தியாக வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். என்னிடம் பி.ஆர்.டீம் இல்லை, என் ஆட்டம் தான், என் கிரிக்கெட் தான், என்.பி.ஆர் ஆனால் இப்போது புரிகிறது, நான் செய்திகளில் இடம்பெற வேண்டும் என்பது முக்கியமாகப்படுகிறது. இல்லையெனில் நான் இந்த கிரிக்கெட் வட்டத்திலேயே என்று நினைத்து விடுகிறார்கள்.


டெஸ்ட் கிரிக்கெட் குறித்த எனது ஆர்வம் தான் என்னை இன்னமும் தக்க வைக்கிறது. இப்போது மும்பை அணிக்காக என் அனைத்தையும் அளித்து வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் அணியிலிருந்து நீக்கப்பட்டேன், ஆனால் பிறகு ரஞ்சி டிராபி ஆட்டம் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு மீண்டும் அணியில் அழைக்கப்பட்டேன். ஆனால் மீண்டும் நீக்கப்பட்டேன். என் கையில் இருப்பது கிரிக்கெட் மட்டுமே.


தென் ஆப்பிரிக்கா தொடர் கடினமானது. எனக்கு அழைப்பு விடுப்பார்கள் என்று நினைத்தேன்; ஆனால் தேர்வு செய்யவில்லை, நீண்ட காலம் இந்திய அணிக்காக ஆடிய எனக்கு இது காயத்தை ஏற்படுத்துகிறது.


என்னை ஏன் அணியிலிருந்து நீக்கினீர்கள் என்று தேர்வாளர்களிடம் சென்று கேட்கக் கூடியவன் அல்ல நான். எல்லோரும் போய் பேசு என்கின்றனர். ஆனால் எதிர்தரப்பில் பேசத் தயாராக இல்லை எனும்போது நான் மட்டும் எப்படி பேச முடியும்? ஒருவருக்கொருவர் நேரடியாகப் பேச விரும்புகிறேன். நான் டெக்ஸ்ட் மெசேஜ் எல்லாம் அனுப்ப மாட்டேன். என் கையில் மட்டையைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆகவே இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்திய அணிக்குத் திரும்புவேன்” என்று கூறினார் அஜிங்கிய ரஹானே.