Notice: Function Elementor\Core\Experiments\Manager::warn_removed_or_hidden_dependency was called incorrectly. Feature mega-menu depends on hidden experiment nested-elements. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 4.3.5.) in /home/u416843817/domains/newsonetamilnadu.com/public_html/wp-includes/functions.php on line 6121
சர்க்கரைக்கும் – பிஸ்தாவுக்கும் என்ன சம்மந்தம்? - Newsone Tamilnadu
22 Tuesday, 2025
2:22 pm
உடனுக்குடன்
தமிழகத்தில் புதிய மழை எச்சரிக்கை பங்குச் சந்தையில் அதிகரிப்பு ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் புதிய திரைப்படம் 'கபாலி' வெளியீட்டு தேதி அறிவிப்பு
உடனுக்குடன்
5 இடைக்காலத் தடை
கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன! இப்ஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!
விராட் கோலி ஓய்வு அறிவிப்பு
5 இடைக்காலத் தடை
கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன! இப்ஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!

சர்க்கரைக்கும் – பிஸ்தாவுக்கும் என்ன சம்மந்தம்?

Spread the love

இந்தியாவில் 13.6 கோடி மக்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனர். 10 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆராய்ச்சியானது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ள ஆசிய இந்தியர்களுக்கு பிஸ்தாவின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து அறிந்து கொள்வதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


மேற்கத்திய மக்களுடன் ஒப்பிடும்போது இங்குள்ள மக்கள் தொகையில் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இல்லாமலும், டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆரம்ப நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவுக்கு முன் பிஸ்தாவை எடுத்துக்கொள்ளும் போது அதில் உள்ள புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள், தினசரி நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் அளவை குறைக்கிறது.


இந்தியாவில் உணவு என்று வரும்போது நாம் வெள்ளை அரிசியையே சாப்பிடுவதால் இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளின் ஒரு பகுதியானது ஊட்டச்சத்து நிறைந்த பிஸ்தாக்களை எடுத்துக்கொள்ளும்போது, அதில் உள்ள புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பாலிபினால்கள் ஆகியவை உணவை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது.


காலை உணவு மற்றும் இரவு உணவுக்கு முன் 30 கிராம் பிஸ்தாவை உட்கொள்வது கிளைசெமிக் அளவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்திய உணவுகளின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தன்மைகளையும் மேம்படுத்துகிறது. பிஸ்தாக்கள் உணவுக் கிளைசெமிக் சுமையைக் குறைக்க உதவுவதோடு, பெரும்பாலும் இந்திய உணவுகளில் குறைந்து காணப்படும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் உணவு நார்ச்சத்து ஆகியவற்றை அதிகரிக்கிறது.


அதே சமயம் இந்த ஆய்வில் உடல் எடையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதற்கு பதிலாக, பிஸ்தா எடுத்துக் கொள்ளும்போது, அது இடுப்பு சுற்றளவையும், ட்ரைகிளிசரைடு அளவையும் குறைக்கிறது. இதன்மூலம் பிஸ்தாவில், அதிக கலோரிகள் இல்லை என்பதும் தெளிவாக தெரிய வருகிறது. இருப்பினும், உணவில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களுக்கு பதிலாக கூடுதல் பிஸ்தா எடுத்துக்கொண்டால் மிகவும் நல்லது.


சிறுநீர் N-methyl-trans-4-hydroxy-L-proline (MHP) அளவுகள் 60% அதிகரித்தது. இது பிஸ்தாவை முறையாக எடுத்துக் கொள்வதைக் காட்டுகிறது. மேலும் இதில் உள்ள ஜீயாக்சாண்டின் போன்ற பாலிபினால் ஆக்சிஜனேற்றிகள், வயது முதிர்வு காரணமாக ஏற்படும் கண் சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் பிற உடல்நலக் குறைபாடுகளிலிருந்து நம்மை பாதுகாத்து பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.


உணவுக்கு முன் பிஸ்தாவை சாப்பிடுவதால் அது, இரத்த குளுக்கோஸ் அளவை மேம்படுத்துவதோடு, கார்டியோமெட்டபாலிக் ஆபத்து காரணிகளைக் குறைத்து, நாம் எடுத்துக்கொள்ளும் உணவை ஆரோக்கியமிக்கதாக மாற்றுகிறது. தாவர புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த பிஸ்தா, நமது உணவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் கிளைசெமிக் அளவை திறம்பட குறைக்கிறது.