
எத்தனை முறை விழுந்தாலும்
எழுந்து நின்று போராடு…
யார் என்ன சொன்னாலும் கவலை படாதே..
உன் பாதையில் நேர்மையாக தொடர்ந்து செல்..
உன் வெற்றியை விதைத்து கொண்டே முன்னேறு..
என்றும் நீயே வெல்வாய்…
நம்பிக்கை என்பது நமக்கு நாமே செய்யும்
ஆயுள் காப்பீட்டு திட்டம் தொடராமல் விட்டுவிடாதீர்கள்…
பிடிக்காத விசயத்தை கண்டுகொள்ளாமலும்,
வேண்டாத விசயத்தில் கவனம் செலுத்தாமலும்,
தேவையற்ற கேள்விகளுக்கு
பதில் சொல்லாமலும்,
இருந்தால் உடலும், மனமும்
ஆரோக்கியமாக இருக்கும்.
உன்னை உதாசினப்படுத்தும் உறவுகளை எதிரிகளாக நினைக்காதே. உன்னை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் வழிகாட்டியாக நினைத்துக் கொள்.
வாழ்க்கையில் நாம் காணும் இன்பமும், துன்பமும் நிலையற்றதே.
முயல முயலத் தான் வெற்றி காட்சியளிக்கும்.
வெற்றிக்கு ஆசைப்பட்டது தோல்வி
தோல்விக்கு இறுதியில் கிடைத்தது மாபெரும் வெற்றி.
காரணம் முயற்சி என்ற பயிற்சியால்
நட்பு அகிலத்தை ஆள வைக்கும் சக்தி கொண்டது.
ஏற்றம் காண ஏங்கி கொண்டிருக்கும்
இதயங்கள் பல இடறி விழும் போது
ஏளன சிரிப்புகள் ஏராளம்..
நம் வலிகளை, திறமைகளை, முயற்சிகளை நம்மை நாமே நம்பாவிட்டால் யார் நம்மை நம்புவார்கள்?
எதுவும் முடியும் என்று எண்ணும்போது முதல் வெற்றியை பெறுகிறாய்.
அதற்கான வழிகளை கடைபிடிக்கும்போது முழு வெற்றியும் பெறுகிறார்.
விழுவது மீண்டும் எழத்தான் எழுந்து பார்,
வாழ்க்கை வெளிச்சமாகும்.
எட்ட முடியாத வானம் கூட உயரமில்லை,
நீ எட்ட வேண்டும் என்று முயற்சிக்கும் உன் தன்னம்பிக்கையின் முன்னால்…..
ஒரு கோடாரி வழுவானது. ஆனால் முடியை வெட்டாது.
ஒரு பிளேடு கூர்மையானது, ஆனால் அது மரங்களை வெட்டாது.
எல்லோருக்கும் ஒரே திறமை இருக்காது,
ஆனால், எல்லோருக்கும் ஒரு திறமை இருக்கும்….
வலி என்பது முன்னேற்றம்.
இரும்பை கொடு வாள் ஆக்குவேன்
வாளை கொடு போரை வெல்வேன்
எந்தப் பக்கம் பிடித்தாரும்
மேல் நோக்கி எரியும் தீபம் போல்,
எந்த நிலை வந்தாலும் ஒரே நிலையில் இருங்கள்.
அது உங்கள் மதிப்பை உயர்த்தும்.
மகத்தான சாதனை புரிந்தவர்கள் அனைவருமே,
தோல்வி பல கடந்து வென்றவர்களே…
நம்பிக்கை எனும் நங்கூரத்தை இதயத்தில் ஆழமாய் பதிய விடு, பல்லாயிரம் சுனாமி, சூறாவளி பிரச்சனைகள் வந்தாலும் சேதமில்லாமலும், வந்த சுவடு தெரியாமலும் போய்விடும்.
நீ உன்னை அறிந்து கொண்டால் தான் உன்னால் உலகை புரிந்து கொள்ள முடியும்.
தோல்வியை கண்டு பயந்து போகாதே…
வெற்றியின் வாய்ப்பு தோல்வியில்தான் உள்ளது.
கவலையின் முடிச்சுகள், ஒருபோதும் மகிழ்ச்சியை அவிழ்ப்பதில்லை. எதற்கும் கவலைப்படாதே…
புகழ் என்பது கடின உழைப்பு தரும் உயர்ந்த பரிசு..
சிந்தனை செய்யுங்கள் செயல்படுங்கள் வெற்றி பெறலாம்…
கனவுகளை நிஜமாக்கும் வரை போராடுங்கள்.
மனதிற்குள் சிந்தனையை ஓட விடுங்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
நீங்கள் முதலில் பாராட்டுங்கள், பிறர் உங்களை பாராட்டுவார்கள்
அன்பு பிறரிடம் நன்மதிப்பை பெற்றுதரும்.
பொறுமை உழைப்பு ஆரோக்கியம் சோர்வின்றி செயல்பட உதவும்.
ஆசையை மிதமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வுலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் திறமைசாலிகளே…
நாம் முழுமையான அனுபவம் பெற வேண்டுமானால் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்.
நம் உடலுக்குள் பூட்டி வைக்கப்பட்ட திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.
நாம் பேசுகிற வார்த்தைகள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை மிக சாதுவாக தீர்க்க வேண்டும்.
மனதில் தெளிவும், உறுதியும் வேண்டும் என்பதை உணர வேண்டும்.

தன்னம்பிக்கை கவிதை 20 வரிகள்:
உன்னைத்தவிர,
யாராலும் கொடுக்க முடியாத,
யாராலும் காண முடியாத,
யாராலும் கேட்க முடியாத,
யாராலும் சொல்ல முடியாத,
யாராலும் சுமக்க முடியாத,
யாராலும் அழிக்க முடியாத,
யாராலும் அபகரிக்க முடியாத,
யாராலும் தடுக்க முடியாத
யாராலும் அளக்க முடியாத,
சில உணர்வுகள் உன்னுள் உண்டு அது,
உனது உழைப்பு,
உனது விடா முயற்சி,
உனது தன்னம்பிக்கை,
உனது பொறுமை,
உனது வெற்றி,
இவ்வைந்து உணர்வுகளை
காலத்தோடு கடந்து வா,
வெற்றிவாகை சூட வா,
மனிதா முன்னேறி வா,
புகழ்பெற்றவர்களின் தன்னம்பிக்கை வரிகள்:
உனக்கு தேவையான எல்லா வலியையும், உதவியும் உன்னிடமே உள்ளன.
ஏளனம், எதிர்ப்பு, அங்கீகாரம் ஆகிய மூன்று நிலைகளைக் கடந்துதான்பெரும் சாதனைகள் செய்ய வேண்டும்.
நம்பிக்கையே வாழ்க்கையின் எதிரி.
வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்.
வாழ்க்கை முழுமை பெறக் கடவுள் நம்பிக்கை வேண்டும்.
வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கை பொன்மொழிகள்:
தோல்வியின் அடையாளம் தயக்கம்.
வெற்றியின் அடையாளம் துணிச்சல்.
துணிந்தவர் தோற்றதில்லை. தயங்கியவர் வென்றதில்லை.
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று, வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.
மெதுவாகப் பேசு. அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும்.
நேற்று அசாத்தியமாக இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம்.