22 Tuesday, 2025
2:22 pm
Spread the love


திருவண்ணாமலை கோவில் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவில் 6 பிரகாரங்களையும் 9 ராஜகோபுரங்களையும் கொண்டு இருக்கிறது. இக்கோவிலில் மலை அடிவாரத்தில் இருப்பது சிறப்பு இச்சி வளாயத்தில் 142 சன்னதிகள் 22 பிள்ளையார் 36 மண்டபங்கள் ஆயிரம் தூண்கள் கொண்டு 1000 கால் மண்டபம் அதன் அருகே பாதாள லிங்கம் 43 செப்பு சிலைகள் கல்யாண மண்டபம் அண்ணாமலையார் பாத மண்டபம் அனைத்தும் இங்கு அமைந்துள்ளன.


கோபுரங்கள் அண்ணாமலையார் கோவிலில் ஒன்பது கோபுரங்கள் இருக்கின்றன. அவற்றில் ராஜகோபுரம், பேகோபுரம், அம்மணியம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லாள மகாராஜா கோபுரம் இவை அனைத்தும் அங்கு இருப்பதாகும் கட்டை கோபுரம் வடக்கு திசையில் கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம், ஆகிய கோபுரங்கள் இங்கு அமைந்துள்ளன.

  1. கிளி கோபுரம் (81 அடி உயரம்).
  2. தெற்கு திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்)
  3. தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்)
  4. மேற்கு பேய் கோபுரம் (160 அடி உயரம்)
  5. மேற்கு கட்டை கோபுரம (70 அடி உயரம்)
  6. வடக்கு அம்மனி அம்மன் கோபுரம் (45 அடி உயரம்).

கிரிவலம் நாம் எப்போது செல்ல வேண்டும்.
சனிக்கிழமை அன்று கிரிவலம் வர பிறவிப்பினை அகலும். ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிடைக்கும். கிரிவலப்பாதையான 14 கிமீ தூரத்தை பக்தர்கள் நடந்தே கடக்க வேண்டும் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலை முத்தி தளம் என்பதால் அனைத்து நாட்களிலும் கிரிவலம் செல்லலாம் இருந்தாலும் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களுக்கு கிரிவலம் செல்வது சிறப்பான பலனை தரும்.


கோவிலின் சன்னதிகள்:


சிவபெருமான் இக்கோவிலின் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இக்கோவில் உள்ள மலையே சிவலிங்கம் என்பது நம்பிக்கை. அம்மன் உண்ணாமலையம்மை, முருகன், விநாயகர், அர்த்த நாரீஸ்வரர், பெருமாள், பைரவர், பிரம்ம லிங்கம், பாதாள லிங்கம் ஆகிய அனைத்து சன்னதிகளும் இங்கே உள்ளது.
திருவண்ணாமலை கோவிலின் தீர்ததங்கள்:

  1. சிவகங்கை தீர்த்தம்
  2. பிரம்ம தீர்த்தம்

தீப தரிசன மண்டபம்:


திருவண்ணாமலை கோவிலில் கிளி கோபுரம் அருகில் தீப தரிசன மண்டபம் அமைந்துள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார் இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வார்கள் இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள்வார்கள்.


திருவண்ணாமலை கோவில் தரிசனம்


கார்த்திகை மாதம் கார்த்திகை தீபநாளை விட்டு தீப பிரமோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் இதில் 10 நாட்கள் உற்றவர்களின் ஊர்வலங்களும் மூன்று நாள் தெப்பொருளாகும் அதை அடுத்து சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது. சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால் பிரம்மன் இருவருக்கும் அக்கினி வடிவமாக காட்சி தந்ததால் அந்த நாளிலேயே தீபதிருநாள் கொண்டாடப்படுகிறது.


கார்த்திகை நாள் அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் தீபம் ஏற்றி அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜை செய்வார்கள். அதன் பிறகு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகே வைப்பார்கள் இதனை ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் தத்துவம் என்பது வழக்கம். பரம்பொருளான சிவபெருமானே பல வடிவங்களாக அருள் தருகிறார் என்பதை இந்த நிகழ்ச்சியில் உள்ள கருத்து ஆகும்.


பின்னர் இந்த தீபத்தை மழைக்கு உச்சியில் கொண்டு சென்று விடுவார்கள் மாலையில் கொடி மரம் அருகில் உள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள்வார்கள் அப்போது மூலஸ்த்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார் அவர் முன்னால் அகண்ட தீபங்கள் ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும் அந்த வேளையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம் மகாதீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க முடியும் மற்ற நாடகளில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை.
பரணி தீபம்


பத்தாம் நாள் அன்று அதிகாளை 4.00 மணிக்கு மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூர கட்சியில் ஜோதி ஓளியேற்றிதீபஒளி காட்டி அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய் தீபத்தில் ஐந்து நந்தி முன் பெரிய அகழ் விளக்கு ஏற்றுவார்கள் இதன் பிறகு உண்ணாமலை அம்மன் சன்னிதியிலும் ஐந்து பெரியவர்கள் அவர்களுக்கு தீபம் ஏற்றுவார்கள் இந்த பரணி தீபம் காலையில் நடக்கும் பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதை கொண்டு பஞ்ச தீபம் ஏற்றப்படுகிறது.


திருவண்ணாமலை ஜோதி வடிவில் பெருமாள்


பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமிகள் அவ்வழியாக வெளியே வருவது வழக்கம். சிவன் தளமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்க வாசலை கடக்கிறார் சிவன் சன்னதிக்கு பின்புரம் பாமா ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி இருக்கிறது. இவற்றின் அருகில் கருடாழ்வார் ஆஞ்சநேயர் சுவாமிகள் இருக்கின்றன.


வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் இக்கோவிலின் சன்னதியில் ஒரு தீபம்ஏற்றி பூஜை செய்கின்றனர் இதன் பிறகு அந்த தீபத்தை பெருமாளாக கருதி பிரகாரத்தில் உள்ள வைகுண்ட வாசல் வழியே கொண்டு வருவார்கள் பஞ்சபூத தலங்களில் இது அக்னி தளம் என்பதால் பெரும்பாலும் ஜோதி வடிவில் எழுந்தருளி காட்சி தருவதாக சொல்கின்றனர்.


திருவண்ணாமலையார் கோவிலின் செந்தூர விநாயகர் சிறப்பு


ஆஞ்சநேயர் சுவாமிக்கு செந்தூரம் பூசி வழிபடுவது போல இக்கோவிலில் விநாயகருக்கும் செந்தூரம் பூசுகிறார்கள். சம்பந்தசுரன் என்றும் அசுரனை விநாயகர் வதம் செய்த போது அவனுடைய ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே விநாயகர் அவருடைய ரத்தத்தை உடலில் பூசிக் கொண்டார் அதன் அடிப்படையில் சித்திரைப் பரப்பு விநாயகர் சதுர்த்தி திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஒரு நாள் வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் பூசி வைபவம் நடக்கிறது. இவரைத் தவிர யானை திரை கொண்ட விநாயகர் சன்னதியும் இருக்கின்றது.


திருவண்ணாமலை கோவிலில் நந்திக்கு செய்யும் பெருமை


இக்கோவிலில் மாட்டு பொங்கல் அன்று நந்திக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படும். அந்நாளில் அனைத்து காய்கரிகள் பழங்கள் இனிப்பு வகைகள் பலகாரங்கள் அனைத்து வகையான மலர்களும் மாலை அணிவித்து பூஜை செய்யப்படும். அந்நேரத்தில் அண்ணாமலையார் நந்தியின் முன் எழுந்திருந்து அவருக்கு காட்சி தருவார் தனது வாகனத்திற்கு முக்கியதுவம் கொடுக்கும் விதமாக சிவன் இவ்வாறு எழுந்து அருள்தருகிறார்.


ஆணவம் அடக்கும் பைரவர்:


கோவிலில் பிரம்மா தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி அமைந்துள்ளது. பைரவர் சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். ஏட்டு கையில் ஆயுதங்கள் ஏந்தியபடி கபால மாலையுடன் காட்சி தருகிறார் இவற்றின் தலையில் பிறை சந்திரன் இருக்கின்றது ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
திருவண்ணாமலை கோவில் நான்கு முக லிங்கம்:
இக்கோவிலில் பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன் இங்கு தனி சன்னதியில் காட்சி தருகிறார் பிரம்மா இங்கு சிவனே வழிபட்டதன் மூலம் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பிரம்மா தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக்கொண்டிருப்பார் . இதனை உணர்த்தும் விதமாக லிங்கத்தின் நான்கு திசையிலும் நான்கு முகங்கள் இருக்கின்றன.


பாதாள லிங்கம்:


மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் வந்த போது இக்கோவிலில் உள்ள பாதாளத்துக்குள் அவர் சென்றார் அங்கு ஒரு பொட்டிற்குள் சிவயோகி சித்தர் இருப்பதை அவர் உணர்ந்தார் அங்கே தவத்தில் அமர்ந்து விட்டார் பின் காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார் இந்த இடத்தில் எதிரே யோக நந்தியுடன் பாதாள லிங்கம் இருக்கின்றது கறிவேப்பிலை பாதையில் மலைக்கு பின்புரம் அமைந்திருக்கும் நேர் அண்ணாமலையில் தனி கோவிலில் அருளுகிறார். இவர் லிங்க தரிசனமும் விசேஷமானது மரண பயம் நீங்க வேண்டிக் கொள்கின்றனர்.


எந்த ராசிக்கு எந்த லிங்கம்
திருவண்ணாமலையில் ராசிப்படி அஷ்டலிங்க வழிபாடு ஓர் எளிய வழிகாட்டல்
ரிஷபம் – துலாம் ராசியினர் வழிபட வேண்டியது இந்திர லிங்கம்
சிம்ம ராசிக்காரர்கள் வழிபட வேண்டியது அக்னி லிங்கம்
விருச்சிக ராசியினர் வழிபட வேண்டியது யம லிங்கம்
மேஷ ராசிகாரர்கள் வழிபட வேண்டியது நிருதி லிங்கம்
முகரம் , கும்ப ராசிக்காரர்கள் வழிபட வேண்டியது வருண லிங்கம்.


நிருதி லிங்கம் என்றால் என்ன


தென்மேற்கு திசையின் அதிபதியான நிருதி பகவானுக்கு ஈசன் நிருதீஸ்வரராக தோன்றி காட்சி கொடுத்த இடமாகும். சனி தீர்த்தம் என்ற குளம் இதன் அருகில் அமைந்துள்ளது.
இவரை வழிபட்டால் குழந்தை வரம் கிட்டும். அதோடு மன நிம்மதியும் கிடைக்கும்.


பாவம் நீக்கும் திரு அண்ணாமலையார் கோவில்


கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம் என்பது பெரியோர்களின் வாக்கு. அதே போன்று இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். அண்ணாமலையார் கோவிலில் அவர் பாதம் அமைந்திருக்கின்றன.
கோவிலில் உள்ள கோபுரத்திற்கு அழகுபுரத்தில் அண்ணாமலையார்பாதம் அமைந்துள்ளது. அடிமுடி காணாத பரம்பொருளின் பாதம் தரிசனம் காண வேண்டி அடியார்களும் அருளாளர்களும் கடும் தவம் மேற்கொண்ட பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்திருந்த இடத்தில் அமைந்திருக்கிறது. அவருடைய திருப்பாதம், தனி சன்னிதியாக அமைந்துள்ளது.


கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் அவர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நம்மளுக்கும் நம் குடும்பங்களுக்கும் சௌபாக்கியங்கள் தரும். பாத தரிசன சன்னிதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெறுகிறது. அண்ணாமலையார் பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர் முருகர் கோதண்டராமர் சக்தி தேவியின் திருவடிகள் காட்சியளிக்கின்றனர். மேலும் மலை உச்சி பகுதியில் அண்ணாமலையின் திருப்பாதங்கள் அமைந்துள்ளது.


திருவண்ணாமலை கோவில் அமைவிடம்
எட்டு திசையிலும் அதிர்ஷ்ட லிங்கங்களை கொண்ட என் கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. இக்கோவிலில் மலையை வலம் சுற்றி வரும் பக்தர்கள் இடது பக்கம் நடக்க வேண்டும் ஏனென்றால் மலையை ஒட்டி உள்ள வலது பக்கத்தில் சித்தர்களும் யோகிகளும் தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம் உள்ளது. கிரிவலம் செல்லும் பொழுது பஞ்ச சாஸ்திர நாமத்தையோ நமச்சிவாய சிவாய நமஹ மற்றும் திருமுறைகளையோ தேவாரம் திருவாசகம் என்றும் உச்சரிக்க வேண்டும். அதை தவிர்த்து வேறு எதையும் பேச கூடாது கிரிவலம் சுற்றி வரும் பக்தர்கள் நிதானமாக கவனமாக நடக்க வேண்டும்.