Notice: Function Elementor\Core\Experiments\Manager::warn_removed_or_hidden_dependency was called incorrectly. Feature mega-menu depends on hidden experiment nested-elements. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 4.3.5.) in /home/u416843817/domains/newsonetamilnadu.com/public_html/wp-includes/functions.php on line 6121
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிப்பு: பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு! - Newsone Tamilnadu
22 Tuesday, 2025
2:22 pm
உடனுக்குடன்
தமிழகத்தில் புதிய மழை எச்சரிக்கை பங்குச் சந்தையில் அதிகரிப்பு ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் புதிய திரைப்படம் 'கபாலி' வெளியீட்டு தேதி அறிவிப்பு
உடனுக்குடன்
5 இடைக்காலத் தடை
கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன! இப்ஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!
விராட் கோலி ஓய்வு அறிவிப்பு
5 இடைக்காலத் தடை
கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன! இப்ஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிப்பு: பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு!

Spread the love

ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ளாத பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையில் அதை மேற்கொள்ள அறிவுறுத்தல்கள் வந்துள்ளன.

தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், கடைசியாக 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது.

ஆசிரியர்கள் விடைத் தாள்கள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு வேலை நாள்கள் இருக்கும். அதன் பின்னர் அவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும். கோடை விடுமுறை நிறைவடைந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திங்கள் கிழமை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டால் மேலும் ஒரு வாரம் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஜூன் மாத தொடக்கத்தில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. எனவே இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா என்பது மே மாத இறுதியில் தெரிய வரும். அதேபோல் பள்ளிகளை சுத்தம் செய்து திறப்பிற்கான பணிகள் மே மாத இறுதியில் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் கோடை விடுமுறை நாள்களிலேயே மாணவர்களின் ஆதார் அட்டைகளை புதுப்பிக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிறுத்தலை வழங்கியுள்ளது. 2024 -2025 கல்வி ஆண்டில் அதாவது கடந்த ஜூன் மாதம் முதல் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளிலேயே 5 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் புதுப்பிக்கத் தவறிய மாணவர்கள் இந்த கோடை விடுமுறை நாள்களில் அருகில் உள்ள அஞ்சலகங்களிலோ, இ சேவை மையங்களிலோ, வட்டார வள மையங்களிலோ தங்கள் ஆதாரில் பயோமெட்ரிக் பணிகளை புதுப்பிக்க வேண்டும். இது தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

புதிதாக பள்ளிகளில் சேரும் மாணவர்கள் சேரும் முன்னரே ஆதார் பயோமெட்ரிக் பணிகளை நிறைவு செய்வதன் மூலம் வங்கிக் கணக்கு தொடங்குதல், நலத்திட்ட உதவிகள் பெறுதல் போன்ற பணிகள் கால தாமதமின்றி நடைபெறும். எனவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.