22 Tuesday, 2025
2:22 pm
Spread the love


புல்லட், கிளாஸிக் என சில மாடல் பைக்குகளை மட்டுமே விற்ப்பனை செய்து வந்தது ராயல் என்ஃபீல்டு. ஆனால் இப்போது பல்வேறு தரப்பினருக்கும் ஏற்ற வகையில் பல புதிய மாடல் களை கடந்த சில ஆண்டுகளில் வெளியிட்டிருக்கிறது.


ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃபிளியே


ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃபிளியே துணை நிறுவனத்தின் மூலம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்குகிறது. ராயல் என்ஃபீல்டு பிராண்டின் மூலம் இல்லாமல், ஃபிளையிங் ஃபிளியே என்ற முற்றிலும் புதிய பிராண்டின் முலம ;எலெக்ட்ரிக் பைக்குகளை உலகளவிலும் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.


இந்த துணை பிராண்டின் மூலம் வெளியிடப்படும் முதல் பைக்கான ஊ6 எலெக்டரிக் பைக்கின் மாதிரியையும் கடந்தாண்டு நடைபெற்ற EICMA நிகழ்வில் ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்தியிருந்தது.


ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650


ராயல் என்ஃபீல்டின் ஐகானிக் பைக் கிளாசிக் 350 பல்வேறு பைக் ஆர்வலர்களும் வாங்க விரும்பும். ஓட்ட விரும்பும் பைக்குகளில் ஒன்று கிளாசிக் 650.
டீசைன் முதல் வசதிகள் வரை பல்வேறு வகையில் கிளாசிக் 350 யை உரித்து வைத்திருந்தாலும், தனக்கே உரிய தனித்துவமான பல்வேறு அம்சங்களையும் கொண்டிருக்கிறது கிளாசிக் 650. இந்த பைக்கில் 648சிசி, பேரலல் ட்வின் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினானது 47hp பவர் மற்றும் 52 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனை கொண்டிருக்கிறது.


இந்த கிளாசிக் 650 பைக்கை கடந்தாண்டு நவம்பர் மாதம் ஐரோப்பாவில் நடைபெற்ற EICMA நிகழ்வில் அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு. அதனைத் தொடர்ந்து விரைவில் இந்த பைக் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ராயல் என்ஃபீல்டு புல்லட் 650


கிளாசிக் 650யைப் போலவே, புல்லட் 350 பைக்கின் இன்ஜின் கொண்ட வடிவம் தான் புல்லட் 650. இந்த பைக்கிலும் அதே 648சிசி, பேரலல் ட்வின் இன்ஜின் தான். ஆனால், டிசைன் மட்டும் புல்லட் 350 பைக்கை அடிப்படையாக கொண்டது. இந்த பைக்கை இன்னும் ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்தவில்லை. தற்போது வரை சோதனையிலேயே இருந்து வருகிறது. ஆனால், சில முறை சோதனை செய்யப்பட்டபோது ஸ்பைஷாட்களில் சிக்கியிருக்கிறது. எனவே, விரைவில் இந்த பைக்கின் அறிமுகத்தை இந்தியாவிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி நாம் எதிர்பார்க்கலாம்.


ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750


இந்த புதிய பைக் மட்டும் கிடையாது, புதிய இன்ஜினும் கூட 350சிசி மற்றும் 650சிசி என இதுவரை மூன்று இன்ஜின்களே ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், நான்காவதாக 750சிசி, பேரலல் ட்வின் இன்ஜினைக் கொண்ட பைக்கான ஹிமாலயன் 750 பைக்கை வெளியிடவிருக்கிறது ராயல் என்ஃபீல்டு.


ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 648சிசி இன்ஜினிலேயே சில மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகளை மேற்கொண்டு 750சிசி இன்ஜினாக ராயல் என்ஃபீல்டு பயன்படுத்த விருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. புதிய பைக் வெளியாகும் போதே இன்ஜின் குறித்த தகவல்களையும் அதிகாரப்பூர்வமாக நாம் இறிந்து கொள்ள முடியும்.
இந்த புதிய இன்ஜினைக் கொண்ட ஹிமாலயன் பைக்கை வெளிநாடுகளில் தற்போது சோதனை செய்து வருகிறது அந்நிறுவனம். ஹிமாலயன் மட்டுமின்றி மேலும் சில பைக்குகளிலும் இந்த 750சிசி இன்ஜினை ராயல் என்ஃபீல்டு பயன்படுத்தும் என்றே தெறிகிறது.


ராயல் என்ஃபீல்டு மீட்டியார் அப்டேட்


2020ம் ஆண்டு வெளியிடப்பட்ட மீட்டியார் 350 சிசி பைக் பெரிய அப்டேட்டிற்குத் தயாராகிறது. ராயல் என்ஃபீல்டின் மற்ற 350சிசி, பைக்குகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 349சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜினே மீட்டியார ;350லும் பயன்படுத்தப்படடிருக்கிறது.
அப்டேட் செய்யப்படும் மீட்டியாரில் மெக்கானிக்கலாக எந்த மாற்றங்களும் அப்டேட்டும் இருக்காது. மாறாக , அனைத்து விளக்குகளும் LEDயில் கொடுக்கப்படும். புதிய நிறங்கள் மற்றும் புதிய டிசைன்கள் பைக்கிற்குக் கொடுக்கப்படும் . இதுதவிர, வசதிகளின் பட்டியலும் சற்று நீளும் எனத் தெரிகிறது.