
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai) தன்னுடைய போட்டியாளர்களுக்கு மிகப் பெரிய சவாலை விடுக்கும் விதமாக தற்போது சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கின்றது. நிறுவனத்தின் முக்கிய நோக்கமே இந்த திட்டத்தின் வாயிலாக புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதே ஆகும். இதன் அடிப்படையிலேயே சிறப்பு பலன்களை வழங்கக் கூடிய திட்டத்தையும் அது உருவாக்கி இருக்கின்றது. அதற்கு ‘சூப்பர் டிலைட் மார்ச்’ (Super Delight March) என்கிற பெயரையும் அது சூட்டி இருக்கின்றது.

இந்த மாதம் 31ம் தேதி வரை மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளான வென்யூ (Venue), ஐ20 (i20), கிராண்டு ஐ10 நியாஸ் (Grand i10 NIOS) மற்றும் எக்ஸ்டர் (Exter) ஆகிய கார் மாடல்களுக்கு மட்டுமே சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. “அடி மாட்டு விலையில் கார்களை விற்றால்தான் வெற்றி பெற முடியும் போல!

மாருதி பின்பற்றும் ஃபார்முலா” இதில் எக்ஸ்டர் கார் மாடலுக்கு ரூ. 35ஆயிரம் வரை சிறப்பு பலன்களையும், ஐ20 கார் மாடலுக்கு ரூ. 50 ஆயிரத்திற்கான சிறப்பு பலன்களும் வழங்கப்பட இருக்கின்றது. உச்சபட்சமாக வென்யூ கார் மாடலுக்கு ரூ. 55 ஆயிரத்திற்கான பலன்கள் சிறப்பு சலுகையின் வாயிலாக வழங்கப்பட இருக்கின்றது. இதே போல், ரூ. 53 ஆயிரத்திற்கான பலன்கள் ஐ10 நியாஸ்-க்கு வழங்கப்பட இருக்கின்றது. ஹூண்டாய் நிறுவனத்தின் அனைத்து டீலர்ஷிப்பிலும் இந்த சிறப்பு சலுகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, குறிப்பிட்ட சில டீலர்களும் இந்த மார்ச் மாதத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அவர்கள் தரப்பில் வழங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், இந்த மார்ச் மாதத்தில் புதிய ஹண்டாய் காரை வாங்குபவர்களுக்கு இரட்டிப்பான பலன் கிடைக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. ஹூண்டாய் நிறுவனம் மேலே பார்த்த இந்த நான்கு கார் மாடல்களை மட்டுமல்ல இன்னும் பல கார் மாடல்களை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.