22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில், சுப்மன் கில் 796 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். பாக்.வீரர் பாபர் அஸம் 773 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு சரிந்துள்ளார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா 761 புள்ளிகளுடன் மாற்றமின்றி, 3-ம் இடத்தில் தொடர்கிறார்.


தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசன் 756 புள்ளிகள் பெற்று 4-ம் இடத்திலும் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 740 புள்ளிகளுடன் 5-ம் இடத்திலும் உள்ளனர். இந்திய அதிரடி வீரர் விராட் கோஹ்லி 727 புள்ளிகளுடன் மாற்றமின்றி 6-ம் இடத்தில் தொடர்கிறார். இலங்கை வீரர் சரித் அசலங்கா 694 புள்ளிகளுடன் 8 இடங்கள் உயர்ந்து, 8-ம் இடத்துக்கு சென்றுள்ளார். மற்றொரு இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் 679 புள்ளிகளுடன் ஒரு இடம் மேலேறி 9-ம் இடத்தை பிடித்துள்ளார். 10-ம் இடத்தில் வெஸ்ட் இண்டீசின் சாய் ஹோப் 672 புள்ளிகளுடன் உள்ளார்.