Notice: Function Elementor\Core\Experiments\Manager::warn_removed_or_hidden_dependency was called incorrectly. Feature mega-menu depends on hidden experiment nested-elements. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 4.3.5.) in /home/u416843817/domains/newsonetamilnadu.com/public_html/wp-includes/functions.php on line 6121
விலைவாங்கும் LIC - Newsone Tamilnadu
22 Tuesday, 2025
2:22 pm
உடனுக்குடன்
தமிழகத்தில் புதிய மழை எச்சரிக்கை பங்குச் சந்தையில் அதிகரிப்பு ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் புதிய திரைப்படம் 'கபாலி' வெளியீட்டு தேதி அறிவிப்பு
உடனுக்குடன்
5 இடைக்காலத் தடை
கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன! இப்ஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!
விராட் கோலி ஓய்வு அறிவிப்பு
5 இடைக்காலத் தடை
கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன! இப்ஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!

விலைவாங்கும் LIC

Spread the love


நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனம் ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. சுகாதார காப்பீடு நிறுவனத்தில் பங்குகளை வாங்குவது குறித்து முடிவு செய்ய இந்திய ஆயள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) நம்புகிறது என்று அதன் தலைமை நிர்வாகி தெரிவித்தார்.


இந்த நிதியாண்டிற்குள், மார்ச் 31 ஆம் தேதிக்கு முன், சில முடிவுகளை எடுக்க முடியும் என்று இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சித்தார்த் மொஹந்தி தெரிவித்துள்ளது.


தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தை வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது அந்நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்க உள்ளதாகவும், விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எல்ஐசிக்கு 51 சதவிகித பங்கு இருக்காது. நாங்கள் அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம் என்று மொஹந்தி கூறினார்.


வளர்ந்து வரும் நுகர்வோர் தேவையைப் பயன்படுத்த தனியார் காப்பீட்டு வணிகத்தில் போட்டி அதிகரித்துள்ளது.


எல்ஐசி ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்களை விற்பனை செய்கிறது. முதலீட்டுடன் இணைக்கப்பட்ட காப்பீடு, மருத்துவ காப்பீடு, தற்போது வரை எல்ஐசி யிடம் இல்லை.


பங்குகளை வாங்குவதன் மூலம் சுகாதாரத்துறையில் நுழைந்தால், எல்ஐசி ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் நேரடியாக போட்டியிடும்.


இந்தியா 20 முதல் 30 ஆண்டுகள் மற்றும் 40 ஆண்டுகள் முதிர்வு கொண்ட பத்திரங்களை வெளியிடும் அதே வேளையில், 50 ஆண்டுகள் அல்லது 100 ஆண்டு பத்திரங்கள் போன்ற நீண்ட கால பத்திரங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.