
வீடு, வணிக நிறுவனங்களில் துல்லியமாக மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ஆளில்லாமல் தொலைத்தொடர்பு வசதியுடன் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்து, முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழக மின்சார வாரியத்தில் ஏற்படும் செலவினங்களை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், மின் பயன்பாட்டின் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டுவரப்போவதாக மின்வாரியம் கடந்த வருடம் தெரிவித்திருந்தது. இதற்கான டென்டரும் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடந்தன.

அமெரிக்க இந்தியர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ளவர்களின் வேலைகளுக்கும் ஆப்பு வைத்த டிரம்ப், அதாவது 25,000 தொழில் நிறுவனங்களில், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக மின்வாரியம் செயல்படுத்தப்போவதாகவும், இதற்காகவே மீட்டர் பொருத்தப்பட்ட நிலையில், சிம்கார்டு வாங்குவதுடன், மென்பொருள் தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
ஸ்மார்ட் மீட்டர் வசதிகள்:
இந்த ஸ்மார்ட் மீட்டரை பொறுத்தவரை மாதந்தோறும் கணக்கெடுக்கும் தேதி, சாப்ட்வேர் வடிவில் அப்லோடு செய்யப்பட்டு, தொலைதொடர்பு வசதியுடன், அலுவலக சர்வரில் இணைக்கப்படுவதால், குறிப்பிட்ட தேதி வந்ததுமே தானாகவே கணக்கெடுத்து நுகர்வோருக்கு கட்டணம் அனுப்பப்பட்டுவிடும்.

இதற்காக 4ஜி அலைவரிசையில் இயங்கும் வகையில் சிம்கார்டு வாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மின் கணக்கீட்டுக்கு புதிய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், சிம்கார்டு மூலமாக கிடைக்கும் தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்தி மாதந்தோறும் ஆளில்லா மின்பயன்பாடு கணக்கு எடுக்கப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.