நிறுவனம் கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.262 கோடி நிகர லாபம் ஈட்டியதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு லாபத்துக்கு திரும்பி இருக்கிறது BSNL.

அரசு நிறுவனமான BSNL. அதன் விரிவாக்கம் மற்றும் சந்தாதாரர் அடிப்படையிலான சேவைகளில் கவனம் செலுத்த தொடங்கியபிறகு கடந்த ஆண்டில் BSNL பல விஷயங்களில் முன்னேறியிருக்கிறது. முழுமையான இயக்கமாக 14 முதல் 18 விழுக்காடு உயர்ந்துள்ளது. வீட்டிற்கு ஃபைபர் சேவை (FTTH) வழங்குவதும் குத்தகைக்கு இணைப்புகளை விடுவதும் அதிகரித்துள்ளது. சிந்தியா கூறுவதன்படி, சந்தாதாரர்கள் எண்ணிக்கை, ஜூன் மாதம் 8.4 கோடியாக இருந்ததிலிருந்து 9 கோடியாக வளர்ந்துள்ளது.

அந்த காலாண்டில் மொபைல் தொடர்பு போன்ற சேவைகள் மூலம் கிடைக்கும் வருவாய் 15% அதிகரித்துள்ளது. FTTH வருவாய் 18%, குத்தகைக்கு விடப்பட்ட இணை 2023-24 நிதியாண்டை விட கடந்த நிதியாண்டில் நஷ்டம் 1,800 கோடி வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக National WiFi Roaming, அனைத்து மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் இலவச பொழுதுபோக்குக்காக BiTV, அனைத்து FTTH வாடிக்கையாளர்களுக்கும் IFTV சேவை போன்றவற்றை வழங்குகிறது.

இந்த ஆண்டு BSNL 4ஜி சேவையை வழங்கியது. முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது. மொத்தமாக 1,00,000 டவர்கள் வைக்க திட்டமிடப்பட்டது. அதில் 75,000 டவர்கள் நிறுவப்பட்டுவிட்டன, 60,000 செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.