22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) பயன்படுத்திவரும் ஒட்டுமொத்த யூசர்களுக்கும் வயிற்றில் புளியை கரைக்கும்படி கூகுள் நிறுவனம் அதை தூக்க இருக்கிறது. உங்களது மொபைலில் கூகுள் அசிஸ்டன்ட் இருந்தால் அல்லது இனிமேல் கூகுள் அசிஸ்டன்ட் பெற விரும்பினால் அவர்களுக்கு இதுதான் நடக்கும். கூகுள் (Google) நிறுவனமே இதை உறுதி செய்திருப்பதால், யூசர்கள் இதை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அப்படி என்ன வர இருக்கிறது?


ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் யூசர்கள் அனைவருக்கும் கூகுள் அசிஸ்டன்ட் கிடைக்கிறது. 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த சேவை மூலம் வாய்ஸ் அசிஸ்டன்ட் இலவசமாக கிடைத்தது. அதிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் கிடைத்ததால், ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பெரும்பாலான யூசர்கள் இதை பயன்படுத்த தொடங்கினர்.


ஆனால், இந்த ஆண்டுக்குள் கூகுள் அசிஸ்டன்ட் சகாப்தம் முடிய இருக்கிறது. இதனால், அதை மீண்டும் பயன்படுத்த முடியாதா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், ஜெமினி (Gemini) அந்த இடத்தை பிடிக்க இருக்கிறது. இந்த ஜெமினி அசிஸ்டன்ட் வாய்ஸ் மட்டுமல்லாமல், ஏஐ மூலமும் யூசர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. நாளுக்கு நாள் அப்கிரேட் செய்யப்பட்டும் வருகிறது. அதேபோல பல்வேறு மொழிகளிலும் கிடைக்கிறது.


இப்போது, தமிழ் மொழியிலும் இந்த ஜெமினி ஏஐ அசிஸ்டன்ட் பயன்படுத்த கிடைக்கிறது. இதனால், ஜெமினி வருகைக்கு பிறகு அதையே யூசர்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால், கூகுள் அசிஸ்டன்ட் பயன்பாடு குறைந்துவிட்டது. சொல்லப்போனால், இது அப்கிரேட் போலத்தான் இருக்கிறது.


அதாவது, கூகுள் அசிஸ்டன்ட் ஏஐ மூலம் அப்கிரேட் செய்யப்பட்டு ஜெமினியாக கிடைக்கிறது என்றே சொல்லலாம். இதையே கூகுள் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. அதாவது, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக கூகுள் அசிஸ்டன்ட் ஆனது வாய்ஸ் ரிககனைஷன் டெக்னாலஜி மற்றும் மொழி சார்ந்த சேவைகளை கொடுத்தது. இப்போது, ஜெனரேட்டிவ் ஏஐ டெக்னாலஜி (Generative AI Technology) நம்முடைய தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றியமைத்து விட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே கூகுள் அசிஸ்டண்டிலிருந்து ஜெமினிக்கு மாறிவிட்டனர். அதே நேரத்தில் அன்றாட வாழ்க்கையில் ஏஐ அசிஸ்டன்ட் எவ்வளவு உதவியாக இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்துகின்றனர். இந்த மேம்பட்ட அனுபத்தை முடிந்தவரை பலருக்கும் கொண்டு செல்வதற்காக வரும் மாதங்களில் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் கூகுள் அசிஸ்டண்ட்டை ஜெமினிக்கு அப்கிரேட் செய்ய இருக்கிறோம்.

அதேபோல இந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து கூகுள் அசிஸ்டன்ட் சேவை மொபைல்களில் கிடைக்காது. மொபைல் ஆப் ஸ்டோர்களிலும் டவுன்லோட் செய்ய கிடைக்காது. கூடுதலாக, டேப்லெட்டுகள், கார்கள், ஹெட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் போன்றவற்றில் இணைக்கப்படும் அசிஸ்டன்ட்டை ஜெமினிக்கு அப்கிரேட் செய்ய இருக்கிறோம். ஸ்பீக்கர்கள், டிவிகள் போன்ற டிவைஸ்களும் ஜெமினியால் இயக்கப்பட இருக்கின்றன. அடுத்த சில மாதங்களில் இது தொடர்பான அப்கிரேட்கள் வெளியாக இருக்கின்றன. அதுவரையில் கூகுள் அசிஸ்டன்ட், யூசர்களுக்கு கிடைக்கும். இதையே கூகுள் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.


ஆகவே, உங்களது ஸ்மார்ட்போன், டேப்லெட்டுகள், ஸ்மார்ட் வாட்சுகள் போன்றவற்றில் இருக்கும் கூகுள் அசிஸ்டன்ட் அப்கிரேட் மூலம் ஜெமினிக்கு மாற்றப்படும். இதில் ஏஐ பீச்சர்கள் இருக்கும். இதை அடுத்த சில மாதங்களில் கூகுள் நிறுவனம் செய்து முடிக்க இருக்கிறது. இப்போதே புதிய ஸ்மார்ட் போன்களில் ஜெமினி வர தொடங்கிவிட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற இந்திய மொழிகள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 40 மொழிகளில் ஜெமினி கிடைக்கிறது. 200 நாடுகளில் பயன்படுத்த கிடைக்கிறது. ஜெனரேட்டிவ் ஏஐ கொண்டிருப்பதால், நாளுக்கு நாள் அப்கிரேட் செய்யப்பட்டு கிடைக்கிறது. சாட்ஜிபிடி, டீப்சீக் போன்ற ஏஐ அசிஸ்டன்ட்களுக்கு நிகராக மாறி வருகிறது.