இந்திய அரசாங்கம் ஆனது கூகுள் குரோம் (Google Chrome) பயனர்களுக்கு ஒரு உயர் தீவிர எச்சரிக்கையை (High-severity Warning) வெளியிட்டுள்ளது. அது என்ன எச்சரிக்கை? கூகுள் குரோம் பயனர்கள் உடனே என்ன செய்ய வேண்டும்? செய்யாவிட்டால் என்ன ஆகும்?

இதோ விவரங்கள்:
செர்ட்-இன் (CERT-In) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய கணினி அவசர நிலை பதிலளிப்பு குழுவின் (Indian Computer Emergency Response Team) படி, கூகுள் குரோமில் பல பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இத்தகைய பாதிப்புகள் ஒரு அட்டாக்கர் தன்னிச்சையான கோட்-ஐ ரிமோட் ஆக இயக்கவும், தரவுகளை கையாளவும், முக்கியமான தகவல்களை வெளியிடவும், டார்கெட் சிஸ்டமில் டிஓஎஸ் (DoS) நிலையை ஏற்படுத்தவும் அனுமதிக்கும்.
செர்ட்-இன் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின் படி, டெஸ்க்டாப்பிற்கான கூகுள் குரோமின் பயனர்கள் தான் இந்த பாதிப்பில் சிக்கும் அபாயத்தில் உள்ளனர். குறிப்பாக விண்டோஸ் மற்றும் மேக் பயனர்களுக்கான 134.0.6998.88/.89-க்கு முந்தைய கூகுள் குரோம் வெர்ஷன்களும், லினக்ஸ் பயனர்களுக்கான 134.0.6998.88-க்கு முந்தைய கூகுள் குரோம் வெர்ஷன்களும். ஆகவே பழைய வெர்ஷனை லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
உங்களுடைய கூகுள் குரோம் வெர்ஷனை சரிபார்ப்பது எப்படி?
உங்கள் கூகுள் குரோம் ப்ரவுஸரின் வெர்ஷனை சரிபார்க்க, கூகுள் குரோம் பிரவுஸரின் மேல் வலது பக்கத்தில் தெரியும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்வதன் மூலம் ‘செட்டிங்ஸ்’ என்பதற்கு செல்லவும். பின்னர் ‘ஹெல்ப்’ என்கிற விருப்பத்தை அடையவும்.

பின்னர் ஹெல்ப் என்கிற விருப்பத்தின் மீது உங்கள் கர்சரை வைக்கவும். இது ஒரு தனி சப் மெனுவை திறக்கும். அந்த சப் மெனுவில், ‘அபௌட் கூகுள் குரோம்’ என்பதை தேர்ந்தெடுக்கவும். இதைத் தேர்ந்தெடுத்த பிறகு, ஒரு புதிய டேப் திறக்கும். இது உங்களுடைய கூகுள் குரோம் தற்போது இயங்கும் வெர்ஷனை பற்றிய விவரங்களை காண்பிக்கும்.
கூகுள் குரோமிற்கு கிடைத்துள்ள அப்டேட்களை சரிபார்ப்பது எப்படி?
உங்கள் கூகுள் குரோம் பிரவுசரில் இன்ஸ்டால் செய்ய தயாராக அப்டேட்கள் உள்ளதாக என்பதைச் சரிபார்க்க, மேலே குறிப்பிட்டுள்ள அதே வழியில் ‘அபௌட் கூகுள் குரோம்’ டேப்-ஐ அடையவும். நீங்கள் புதிய டேப்-ஐ அடைந்ததும், பதிவிறக்கம் செய்ய அல்லது இன்ஸ்டால் செய்ய தயாராக உள்ள அப்டேட்கள் காண்பிக்கப்படும்.
சாப்ட்வேர் அப்டேட் தொடர்பான சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, சாம்சங் (Samsung) வழியாக கிடைத்த லேட்டஸ்ட் சாஃப்ட்வேர் அப்டேட் (Latest Software Uptate) ஆனது பல சாம்சங் சவுண்ட்பார் யூனிட்களை (Samsung Sound Bar Units) முற்றிலுமாக முடக்கியதாக புகார்கள் எழுந்துள்ளன. இதில் க்யூ800டி, க்யூ990டி மற்றும் க்யூ995டி போன்ற உயர்நிலை மாடல்களும் அடங்கும்.

இதன் விளைவாக சாம்சங் நிறுவனத்தின் சவுண்ட் பார்களின் விற்பனை திடீரென பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. ஏனென்றால் பெரும்பாலான பயனர்கள் தரம் மற்றும் நம்பகத்தன்மை ஆகிய இரண்டையும் சாம்சங் தயாரிப்பின் இரண்டு முக்கிய அம்சங்களாக நினைக்கிறார்கள்; அதே பயனர்கள், தங்களுடைய நம்பகமற்ற தன்மையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சாம்சங் நிறுவனமானது கடந்த வார தொடக்கத்தில் சேஞ்ச்லாக் எதுவும் இல்லாமல் ஃபார்ம்வேர் வெர்ஷன் 1020-ஐ கொண்ட ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளது. அதன் பின்னரே பிரச்சனை எழுந்துள்ளது. சாம்சங்கின் கம்யூனிட்டி ஃபோரம் மற்றும் ரெடிட்டில் உள்ள ஏராளமான புகார்களின்படி, சாம்சங் சவுண்ட்பாரின் வெல்கம் மெசேஜ் (“ஹலோ”) மற்றும் இன்புட் சோர்ஸையும் வெளிப்படுத்திய பிறகு சிக்கல் தொடங்குகிறது.
சாம்சங் சவுண்ட் பார் ஆனது டிவியுடன் கனெக்ட் ஆக தவறுகிறது. இதனால் டிவி அதன் பில்ட்-இன் ஸ்பீக்கர்களுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஒலியளவை சரிசெய்வதன் மூலமோ அல்லது ரிமோட் அல்லது பிஸிக்கல் பட்டனை பயன்படுத்தி சவுண்ட்பாரை ஆஃப் செயவதன் மூலமோ இந்த சிக்கலை சரிசெய்ய முடியவில்லை என்றும் பயனர்கள் புகார் அளித்துள்ளனர். பவர் கேபிளை துண்டித்து மீண்டும் இணைப்பதன் மூலமும் கூட இந்த சிக்கலை தீர்க்க முடியவில்லையாம்.