22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

கூகுள் (Google) நிறுவனம் அதன் பிக்சல் 9 சீரீஸின் (Pixel 9 Series) கீழ் புதிய பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. இது ஆப்பிளின் லேட்டஸ்ட் மற்றும் பட்ஜெட் விலை ஐபோன் ஆப்பிள் ஐபோன் 16இ (Apple iPhone 16e) மாடலை விட மலிவான விலைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


ஏன்? சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்தியாவில் கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9A) ஸ்மார்ட் போனின் பேஸிக் 128 ஜிபி ஆப்ஷன் ரூ.43,000க்கும், 256 ஜிபி வேரியண்ட் ரூ. 51,800க்கும் அறிமுகம் செய்யப்படலாம். இது மிகவும் சமீபத்தில் அறிமுகமான நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3A Pro) மாடலை விட விலை அதிகம் என்றாலும் ரூ.59,000க்கு வாங்க கிடைக்கும் ஐபோன் 16ஐ மாடலை விட மலிவானதாக உள்ளது.


ஆக பிரீமியம் மிட்-ரேன்ஜ் பிரிவில் எந்த ஸ்மார்ட் போனை வாங்கலாம் என்கிற யோசனையில் உள்ளளவர்கள் ஆப்பிளின் லேட்டஸ்ட் ஐபோன் 16ஐ மற்றும் நத்திங்கின் போன் 3ஏ ப்ரோ 2 ஆகிய மாடல்களுடன் கூகுள் பிக்சல் 9ஏ மாடலையும் கருத்தில் கொள்ளும் சூழ்நிலை உருவாகலாம். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 9ஏ மாடலின் சரியான வெளியீட்டு தேதியை (Google Pixel 9a Launch date) இன்னும் அறிவிக்கவில்லை.


பிக்சல் 9ஏ ஸ்மார்ட் போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்?
யுஎஸ் எப்சிசி (USFCC) வலைத்தளம் வழியாக கிடைத்த விவரங்களின்படி, பிக்சல் 9ஏ ஸ்மார்ட் போன் ஆனது செயற்கைக்கோள் இணைப்புக்கான ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது பிக்சல் 9 சீரீசில் உள்ள மற்ற மாடல்களை போலல்லாமல் ரெய்ஸ்டு கேமரா மாட்யூல் (Raised Camera Module) இல்லாத டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும்.


பிக்சல் 9ஏ ஸ்மார்ட் போன் ஆனது ஐரிஸ், அப்சிடியன், பியோனி மற்றும் போர்சேலைன் ஆகிய 4 கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து லீக் ஆன ஒரு போஸ்டரில், ஸ்மார்ட்போனின் மீது நீர்துளிகள் காணப்படுகிறது. இது அதன் ஐபி ரேட்டிங்கை குறிப்பதாக தெரிகிறது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை (IP68 Rating) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இது கூகுள் ஜெமினி ஏஐ ஆதரவுடன் (Google Gemini AI Support) வரும் என்றும், கூகுளின் டென்சர் ஜி4 சிப்பால் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப்செட் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம்.

கேமராக்களை பொறுத்தவரை 48 மெகாபிக்சல் பிரைமரி ரியர் கேமரா இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 15 உடன் வரலாம். கடைசியாக 23W (வயர்டு) மற்றும் 7.5W (வயர்லெஸ்) சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,100mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.


இந்தியாவில் பிக்சல் 9, பிக்சல் 9ப்ரோ, பிக்சல் 9ப்ரோ எக்ஸ்எல் விலை விவரங்கள்:
பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 12ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் ரூ. 79,999க்கு வாங்க கிடைக்கிறது. இது Peony, Porecelain, Obsidian மற்றும் Wintergreen கலர்களில் வாங்க கிடைக்கும்.


அடுத்ததாக உள் பிக்சல் 9ப்ரோ ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக உள்ள பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,24,999க்கு வாங்க கிடைக்கிறது. இரண்டு ப்ரோ மாடல்களுமே Hazel, Porcvelain, Rose Quartz மற்றும் Obsidian ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும்.