சேகுவேரா – வரலாற்றின் நாயகன்: (Part 4)

(Part 4) ஏர்னெஸ்டோவுக்கு ஒரு காதலி இருந்தார். அவர் பெயர் சிசினா. சிசினா மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்தார் ஏர்னெஸ்டோ. சிசினா விடுமுறையில் தனது பெற்றோருடன் கழிக்க சென்றிருந்தார். பயணம் போகிற பாதையில் சிசினாவை பார்த்து 2 நாட்கள் செலவிட்டு செல்ல திட்டமிட்டிருந்தனர். சிசினாவுக்கு நாய்க்குட்டி என்றால் நல்ல விருப்பம் ஆகவே மனம் கவர்ந்த காதலிக்கு பரிசளிக்க ஒரு நாய்க் குட்டியையும் தன்னோடு எடுத்து சென்றார் ஏர்னெஸ்டோ. நீண்ட பயணங்களுக்கிடையே இளைப்பாறிய பின்னர் 1200 கிமீட்டர் […]
சேகுவேரா – வரலாற்றின் நாயகன்: (Part 3)

(Part 3) யுத்தத்தின் காரணமாக ஸ்பெயினிலிருந்து மருத்துவர் ஜூயன் கொன்சலெஸ் அகுலர் குடும்பத்தினர் 3 குழந்தைகளுடன் அர்ஜெண்டினாவில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் ஏர்னெஸ்டோவின் அண்டை வீட்டில் குடியிருந்தனர். ஏர்னெஸ்டோவீட்டிலிருந்து சுமார் 35 கி.மீட்டர் தொலைவில் இருந்த பள்ளியில் ஏர்னெஸ்டோவும் அந்த 3 குழந்தைகளும் சேர்ந்து படித்து வந்தனர். இரு குடும்பத்தினருக்குமிடையே நெருக்கமான உறவு இருந்தது. மருத்துவர் ஜூயனும் அவரது குடும்பத்தினரும் பகிர்ந்துகொண்ட ஸ்பெயின் நாட்டின் உள்நாட்டு யுத்த அனுபவங்கள் ஏர்னெஸ்டோவுக்குள் விடுதலைக்கான விதையை சிறுவயதில் விதைத்திருந்தது. பெற்றோர் […]
சேகுவேரா – வரலாற்றின் நாயகன்: (Part 2)

(Part 2) அர்ஜென்டினாவில் 1930ல் ஏற்பட்ட புரட்சியின் பின்விளைவாக பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானது. அர்ஜென்டினாவிலிருந்து மாட்டிறைச்சி, கோதுமை முதலியவை ஐரோப்பியாவிற்கு ஏற்றுமதியை மையமாக உற்பத்தி நடைபெற்றது. உள்நாட்டில் மக்களுக்கு தேவையான பொருட்கள் கடுமையாக விலையேறியது. பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் தங்களது வாழ்விற்காக வேலை தேடி நகரங்களுக்கு குடிப்பெயர்ந்தனர். புயெனெஸ் எயர்ஸ்ல் மட்டும் சுமார் 1.4 மிலிலியன் பேர் கிராமப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தார்கள். ஏழைகள் நடுத்தர வர்க்கம், பணக்காரர்கள் மத்தியிலான இடைவெளி அதிகரிக்க துவங்கியது. பாதிப்புக்குள்ளான மக்கள் சமூகபோராட்டங்கள், கருத்தியல் அடிப்படையில் […]
சேகுவேரா – வரலாற்றின் நாயகன்: (Part 1 )

(Part 1 ) ஜனவரி 1, 1959 உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. கியூபா அதிபர் பாட்டிஸ்டா தனது பணிதுறப்பு (இராஜினாமா) செய்தார். பணித்துறப்பு செய்ததும் இரவோடு இரவாக தனது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ அதிகாலை 3 மணிக்கு கேம்ப் கொலம்பியா விமானத்தளத்திலிருந்து நாட்டை விட்டு வெளியேறினார். அவர் அடைக்கலமாய் சேர்ந்த இடம் டொமினிக்கன் குடியரசில், அதே வேளை ஹவானா முதல் கியூபாவின் தெருக்களில் புரட்சியாளர்கள் மக்கள் வரவேற்புடன் கூடிய நடமாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கின. பாட்டிஸ்டாவின் […]