ஒரு வருடத்தில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்த தேஜாஸ் நெட்வொர்க்ஸ்…. கிடுகிடுவென சரிந்த பங்கு விலை…

2024-25ம் நிதியாண்டின் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் ரூ.71.80 கோடி நிகர நஷ்டம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.146.78 கோடி நிகர லாபமாக இருந்தது. இது நிறுவனத்தின் தொடர்ச்சியான 4 காலாண்டுகளாக லாபகரமாக இருந்த நிலையில் தற்போது நஷ்டம் அடைந்துள்ளது. தொலைத்தொடர்பு சாதனத் தயாரிப்பு நிறுவனமான டாடா குழுமத்திற்குச் சொந்தமான தேஜாஸ் நெட்வொர்க்ஸ், நான்காவது காலாண்டில் ரூ.71.80 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து அந்த பங்கின் விலை இன்று ஒரே […]