தமிழ்நாடு வனத்துறையில் உதவி வனப் பாதுகாவலர்

வனத்துறையில் uகாலியாக உள்ள உதவி வனப் பாதுகாவலர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Assistant Conservator (Forest).வயது: 01.07.2025 தேதியின்படி 21 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/ முஸ்லிம் பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு பொதுப்பிரிவு எனில் 50 வயது வரையிலும், இதர பிரிவினருக்கு 55 வயது வரையிலும் தளர்வு அளிக்கப்படும். […]