22 Tuesday, 2025
2:22 pm

RCB கோப்பையை வெல்லுமா?

ஐபிஎல் வரலாற்றில் 17 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் அணிகளுள் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களுரும் (ஆர்சிபி) ஒன்று. நட்சத்திர பட்டாளங்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள் படை என ஒவ்வொரு சீசனிலும் குதூகலமாக அந்த அணி களம் கண்ட போதிலும் சாம்பியன் கோப்பையை வெல்வது என்பது அந்த அணிக்கு கானல் நீராகவே உள்ளது. எனினும் இம்முறை 18-வது சீசனில் புத்தெழுச்சியுடன் களமிறங்குகிறது ஆர்சிபி. புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார். நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி அணியும் […]

ஐபிஎல் செய்திகள்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் 23-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த சீசனில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பஸ்களில் கட்டணம் ஏதும் செலுத்தாமல் பயணிக்கலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. […]

RR அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி!

ஜாஸ் பட்லரின் வெளியேற்றம், தோனி உடனான உறவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் பகிர்ந்துள்ளார். ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: “ஐபிஎல் ஒரு அணியை வழிநடத்துவதற்கும், மிக உயர்ந்த தரத்தில் விளையாடுவதற்கும் வாய்ப்பு தருகிறது. அதேசமயம், பல நெருங்கிய நட்புகளையும் உருவாக்க உதவுகிறது. ஜாஸ் பட்லர் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் ஒருவர். நாங்கள் ஏழு ஆண்டுகள் சேர்ந்து விளையாடியுள்ளோம். ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக இருந்தோம். […]