RR அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி!

ஜாஸ் பட்லரின் வெளியேற்றம், தோனி உடனான உறவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் பகிர்ந்துள்ளார். ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: “ஐபிஎல் ஒரு அணியை வழிநடத்துவதற்கும், மிக உயர்ந்த தரத்தில் விளையாடுவதற்கும் வாய்ப்பு தருகிறது. அதேசமயம், பல நெருங்கிய நட்புகளையும் உருவாக்க உதவுகிறது. ஜாஸ் பட்லர் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் ஒருவர். நாங்கள் ஏழு ஆண்டுகள் சேர்ந்து விளையாடியுள்ளோம். ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக இருந்தோம். […]