காஞ்சியை ஆளும் காமாட்சி அன்னை!

கோயில் மாநகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது மிக முக்கியமான கோவில், காமாட்சி அம்மன் திருக்கோவில் ஆகும். 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், மோட்சம் தரும் தலங்களில் ஒன்றாகவும் அன்னை காமாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரங்களை தரும் அன்னையாக, பேசும் தெய்வமாக காமாட்சி அம்மன் அருள்பாலித்து வருகிறாள். தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான சக்தி பீடமாக விளங்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், அன்னை பராசக்தியில் தொப்புள் பகுதி விழுந்த இடமாக கருதப்படுகிறது. […]