மணிமேகலை வாழ்க்கை வரலாறு

மானுடகுலம் தழைக்க மடிக்கலம் ஏந்திவந்த மாமகள், மணிமேகலை, ‘அவள் காப்பியக்கன்னி அல்லவா’ என்று தோன்றலாம் ஆனால் வெட்டவெளியில் காப்பியங்கள் உருவாவதில்லை. எனவே மணிமேகலை நிஜம். அவள் ஏந்திய மடிக்கலமும் நிஜம்.காப்பியத்தின் படி, கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மண்மேகலை. கண்ணகியையும் அவள் அன்னையென்றே கொள்கிறாள். ஆனால் கோவலனை வெறுக்கிறாள் ‘பூவைத் துய்த்து வீசிச்சென்ற கொலைபாதகன்’ என்றே அவனை மதிப்பிடுகிறாள். இந்தத் துணிச்சலே சீதை, ராதை, கண்ணகி, மாதவி என எல்லோரையும் கடந்து மணிமேகலையை இந்திய நிலத்தின் மாபெரும் காவியநாயகியாக […]