22 Tuesday, 2025
2:22 pm

சமயபுரம் மாரியம்மன் கோயில்

தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனுர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு வடக்கே செல்லாயி அம்மன் கோயிலும், போஜீஸ்வரன் கோயிலும் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி கோயிலும், முத்தீஸ்வரன் கோயிலும் அமைந்துள்ளன. இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாகவும், தொடர்ந்து அங்கு அம்மன் கோயில் உருவானதாகவும் […]