RR அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி!

ஜாஸ் பட்லரின் வெளியேற்றம், தோனி உடனான உறவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் பகிர்ந்துள்ளார். ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: “ஐபிஎல் ஒரு அணியை வழிநடத்துவதற்கும், மிக உயர்ந்த தரத்தில் விளையாடுவதற்கும் வாய்ப்பு தருகிறது. அதேசமயம், பல நெருங்கிய நட்புகளையும் உருவாக்க உதவுகிறது. ஜாஸ் பட்லர் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் ஒருவர். நாங்கள் ஏழு ஆண்டுகள் சேர்ந்து விளையாடியுள்ளோம். ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக இருந்தோம். […]
தல தோனியை சந்திக்க மிகுந்த ஆர்வம் – ஜடேஜா பேட்டி!

ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம்க்கு ஜடேஜா வந்து சேர்ந்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் ஜடேஜா நேரடியாக துபாயில் இருந்து […]
தோனிக்கு பொறாமை? ரோஹித் சர்மா – ரசிகர்கள் குற்றச்சாட்டு!

விராட்கோலியும், ரோகித் சர்மாவும் நான்கு ஐசிசி கோப்பைகளை வென்று அதிக ஐசிசி கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் என்ற சாதனையை படைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான தோனி, டெஹ்ராடூன் சென்றிருந்த நிலையில் அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி வென்றிருக்கிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்டனர். அதற்கு தோனி கோபமாக இங்கிருந்து விலகி செல்லுங்கள் என்பது போல கையை காட்டினார். சாம்பியன்ஸ் […]