நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாம்பழம்

மாம்பழம்… என்ன பேரைக் கேட்டாலே சும்மா நாக்கில் எச்சில் ஊறுகிறதா? இருக்காதா பின்னே. பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழமே. மிகவும் சுவையான மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது அல்ல. அதனுள் உள்ள மருத்துவ குணங்களை சொன்னால் ஆச்சரியப்பட்டு விடுவீர்கள். அத்தனை ஆற்றல் உள்ளது அதற்கு. மாம்பழம் பல நன்மைகளை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஏ மற்றும் பி6 போன்ற வைட்டமின்கள் உள்ளன. மேலும், இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. மாம்பழம் செரிமானத்தை மேம்படுத்துகிறது, […]
வாழைத்தண்டு சாப்பிடுங்க, உங்க உடம்புல இந்த மாற்றம் எல்லாம் உண்டாகும்!

கடுமையான வெயிலின் தாக்கத்தை குறைக்க முடியாது. ஆனால் வெப்பநிலை பாதிப்பை குறைக்க உணவு முறை சிறப்பாக உதவும். அந்த வகையில் இயற்கை நமக்கு பல்வேறு வகையான உணவுகளை கொட்டி கொடுத்துள்ளன. அதில் ஒன்று வாழைத்தண்டு. வெயில் காலம் முடியும் வரை தினமும் ஒரு கப் வாழைத்தண்டு சாப்பிட்டு வருவது வெப்பத்திலிருந்து உடலை காப்பாற்றுவதோடு இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளையும் உடலுக்கு அளிக்கும். அப்படியான நன்மைகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம். வாழைத்தண்டு பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. வாழைமரத்திலிருந்து […]