கனடாவுக்கு எதிரான வரிகளில் என்ன நடக்கிறது?

அமெரிக்காவின் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய இரு நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீத வரிகளை டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார். இவை முதலில் பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கவிருந்தன. ஆனால் இறுதியாக மார்ச் 4-ஆம் தேதி தொடங்கப்பட்டன. இதற்கிடையில், கனடா எரிசக்தி இறக்குமதிகள் 10 சதவீத வரியை எதிர்கொள்கின்றன.வரி விதிப்பு நடவடிக்கைகளின் ஒரு மாத கால தாமதம், “கனடாவுடன் இறுதிப் பொருளாதார ஒப்பந்தத்தை எட்ட முடியுமா இல்லையா” என்பதை அமெரிக்கா தெரிந்துகொள்ள அனுமதிக்கும் என்று டிரம்ப் முன்பு […]
சுங்க வரி என்றால் என்ன?

சுங்க வரி என்பது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகள். பெரும்பாலான கட்டணங்கள் பொருட்களின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த வரியை, பொதுவாக அவற்றை இறக்குமதி செய்பவர்தான் செலுத்துகிறார். உதாரணமாக, சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் 4 டாலர் மதிப்புள்ள ஒரு பொருளுக்கு கூடுதலாக 0.40 டாலர் சுங்கக் கட்டணம் விதிக்கப்படுவது, அந்தப் பொருளுக்கான 10 சதவீத வரி எனப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை உயர்த்துவது, நுகர்வோர் […]
டிரம்ப் வரி விதிப்பு முறையை ஏன் பயன்படுத்துகிறார்?

டிரம்பின் பொருளாதாரத் திட்டங்களில் வரிகள் ஒரு மையப் பகுதியாகும். வரிகள் அமெரிக்க உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் வேலைகளைப் பாதுகாக்கும், அத்துடன் வரி வருவாயை உயர்த்தி பொருளாதாரத்தை வளர்க்கும் என்று டிரம்ப் கூறுகிறார். 2024-ஆம் ஆண்டில், சீனா, மெக்ஸிகோ மற்றும் கனடாவிலிருந்து வரும் பொருட்கள், அமெரிக்காவின் மொத்த இறக்குமதியில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தன. “சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்துவது மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த ஃபெண்டானின் உள்ளிட்ட பிற போதை பொருட்கள் நம் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பது குறித்து அவர்கள் […]