22 Tuesday, 2025
2:22 pm

சுங்க வரி என்றால் என்ன?

சுங்க வரி என்பது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகள். பெரும்பாலான கட்டணங்கள் பொருட்களின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த வரியை, பொதுவாக அவற்றை இறக்குமதி செய்பவர்தான் செலுத்துகிறார். உதாரணமாக, சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் 4 டாலர் மதிப்புள்ள ஒரு பொருளுக்கு கூடுதலாக 0.40 டாலர் சுங்கக் கட்டணம் விதிக்கப்படுவது, அந்தப் பொருளுக்கான 10 சதவீத வரி எனப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை உயர்த்துவது, நுகர்வோர் […]

டிராம்பா? இந்தியாவுக்கு எதிர்ப்பு!

இந்தியாவே அதிக வரி போட்டு, அதிக பணம் வைத்துள்ளார்கள். அவர்கள் நாட்டில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க நாங்கள் ஏன் ரூ.180 கோடி நிதி உதவி தர வேண்டும்? என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி கேட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் அரசின் செலவுகளை குறைக்க, உலக பணக்காரர் எலான் மஸ்க் தலைமையில் அரசின் செயல்திறன் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு கடந்த சில தினங்களுக்கு முன்பாக, இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.180 கோடி […]

சுனிதாவை கைவிட்ட பைடன்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் விடப்பட்டதற்குப் பின்னால் அரசியல் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் தனியார் தொலைக்காட்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்பும், அரசு செயல்திறன் துறை தலைவர் எலான் மஸ்க்கும் பேட்டி அளித்தனர். அப்போது பேசிய டிரம்ப், சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்களை பைடன் கைவிட்டதாக குற்றம் சாட்டினார். பட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸ் ஆகிய விண்வெளி வீரர்களை மீட்க […]

பாலஸ்தீனர்கள் எதிர்ப்பும் – பின்னணி என்ன?

காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி சீரமைக்கும். இங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் வேறு நாடுகளில் குடியேற வேண்டும், என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு பலதரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது. இஸ்ரேல் மீது, காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் ராணுவத்தின் 34 பேர் உட்பட 251 பேரை பிணைக் கைதிகளாக காசாவுக்கு கொண்டு சென்றனர். இந்த […]

‘ஹெச்1பி’ விசா – டிரம்ப் அதிரடி முடிவு!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அமெரிக்க அதிபராக, டொனால்ட் டிரம்ப் இரண்டாம் முறை பொறுப்பேற்றுள்ள பின்னர், அந்நாட்டின் குடியுரிமை விதிகளில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இந்த விவகாரம் தொடர்பான வழக்குகளில் அந்நாட்டு நீதிமன்றங்கள் பிறப்பித்த சில உத்தரவுகளும் இந்தியர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், ‘ஹெச்1பி’ விசா வைத்துள்ள பெற்றோருடன் வசிக்கும் இளையர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘ஹெச்1பி’ விசாவில் அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் குழந்தைகளுக்கு ‘ஹெச்4’ என்ற விசா […]

டிரம்ப் வரி விதிப்பு முறையை ஏன் பயன்படுத்துகிறார்?

டிரம்பின் பொருளாதாரத் திட்டங்களில் வரிகள் ஒரு மையப் பகுதியாகும். வரிகள் அமெரிக்க உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் வேலைகளைப் பாதுகாக்கும், அத்துடன் வரி வருவாயை உயர்த்தி பொருளாதாரத்தை வளர்க்கும் என்று டிரம்ப் கூறுகிறார். 2024-ஆம் ஆண்டில், சீனா, மெக்ஸிகோ மற்றும் கனடாவிலிருந்து வரும் பொருட்கள், அமெரிக்காவின் மொத்த இறக்குமதியில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தன. “சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்துவது மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த ஃபெண்டானின் உள்ளிட்ட பிற போதை பொருட்கள் நம் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பது குறித்து அவர்கள் […]