22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

7500 mAh பேட்டரியுடன் புதிய விவோ (Vivo) ஸ்மார்ட்போன் வருகிறது என்கிற தகவல் வெளியான வேகத்தில் 8000 அயுh பேட்டரியுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இம்மாத இறுதியில் ஐக்யூ (IQOO) நிறுவனம் 8000 mAh பேட்டரியுடன் (8000mAh Battery) புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


ஐக்யூ நிறுவனம் இந்த 2025 மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தில் சீனாவில் அதன் இஸட்10 சீரிஸ் (Z10 Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிஸில் டைமன்சிட்டி 8400 சிப்செட் உடனான ஐக்யூ இஸட்10 டர்போ மற்றும் நெக்ஸ்ட் ஜெனரேசன் ஸ்னாப்டிராகன் 8எஸ் எலைட் சிப்செட் உடனான ஐக்யூ இஸட் 10 டர்போ ப்ரோ ஆகிய “டர்போ-பிராண்டட்” மாடல்களும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில் நம்பகமான டிப்ஸ்டர்களின் ஒருவரான பாண்டா இஸ் பால்ட் (Panda is Bald) வழியாக கிடைத்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், ஐக்யூ இஸட் சீரீஸ் உடன் போட்டியிடும் நோக்கத்தின் கீழ் இன்னொரு ஸ்மார்ட் போன் நிறுவனமும் 8000 mAh பேட்டரியில் பணியாற்றுகிறது. இருப்பினும் அவர், ஸ்மார்ட்போனின் மாடல் பெயர் அல்லது ஸ்மார்ட்போனின் பிராண்ட் பெயரை வெளிப்படுத்தவில்லை.


இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி அல்லது ஓப்போவிற்கு சொந்தமானது அல்ல என்பதை கமெண்ட் செக்ஷன் வழியாக தெளிவுபடுத்தியுள்ளார். பலர் இந்த “மர்மமான போன்” ஹானர் நிறுவனத்தின் மாடல் ஆக இருக்கலாம் என்று ஊகித்துள்ளனர். நினைவூட்டும் வண்ணம் ஹானர் நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டில் ஹானர் எக்ஸ்50ஐ, எக்ஸ்50ஐ பிளஸ், மற்றும் எக்ஸ்50 ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது.


இருப்பினும், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 மற்றும் 5,800mAh பேட்டரியுடன் கூடிய எக்ஸ்50 ஜிடி மாடல் 2024 ஜனவரியில் தான் அறிமுகமானது. இதேபோல் கடந்த ஆண்டு, இந்த பிராண்ட் ஹானர் எக்ஸ்60ஐ, எக்ஸ்60 மற்றும் எக்ஸ்60 ப்ரோ ஆகிய மாடல்களை அறிமுகம் செய்தது. ஆனால் ஹானர் எக்ஸ்60 ஜிடி (Honor X60 GT) ஜனவரி 2025ல் அறிமுகம் செய்யப்படவில்லை. ஆக இதுதான் 8000அயுh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும் என யூகிக்கப்படுகிறது.


7,500mAh பேட்டரி உடன் வரும் விவோ ஸ்மார்ட்போன்: டிப்ஸ்டர் பாண்டா இஸ் பால்ட் (Panda is Bald) வழியாக கிடைத்த சமீபத்திய தகவலின்படி, விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரல் 3 சிப்செட் மற்றும் 7320mAh வீத மதிப்புள்ள பேட்டரியை கொண்டிருக்கும். இந்த பேட்டரியின் வழக்கமான மதிப்பு சுமார் 7,500mAh ஆக இருக்கலாம்.


இதுதவிர்த்து விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான 32 மெகாபிக்சல் கேமராவை கொண்டிருக்கும். ரியர் கேமரா செட்டப்பை பொறுத்தவரை இது 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன் கூடிய டூயல் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். இதுதவிர்த்து விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.


விவோ ஒய்300 சீரிஸில் விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் சக்திவாய்ந்த மாடல் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். விவோ ஒய்300 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது இந்த மாத இறுதிக்குள் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விலையை பொறுத்தவரை விவோ ஒய்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் ஆனது, சீனாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.25,000க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே ப்ரோ பிளஸ் மாடல் ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இந்திய அறிமுகம் மற்றும் விலை விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.