NewsOne Tamil Nadu
Spread the love

மென்பொருள் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நிறுவனங்களாக செயல்பட்டு வரும் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், HCL, ஏசென்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த 18 மாதங்களில் மட்டும் கணிசமான அளவு பணியாளர்கள் இந்த நிறுவனங்களில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னணி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை ஆண்டுதோறும் வேலைக்கு அமர்த்துவதை வழக்கமாக கொண்டுள்ளன. அதே நேரம் தேவைக்கு அதிகமாக இருப்போர் பணி நீக்கம் செய்யப்பட்டும் வருகிறார்கள். பெரிய நிறுவனங்களில் இந்த ஆட்கள் சேர்ப்பு, ஆட்கள் குறைப்பு என்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.


இந்நிலையில் மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் விப்ரோ, இன்ஃபோசிஸ், எல்.சி.எல், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது பெஞ்ச் சைஸ் பணியாளர்களை குறைத்துள்ளது. பெஞ்ச் சைஸ் என்பது முழு நேர பணியாளர்களை குறிக்கும். இவர்கள் ஆக்டிவ்வாக எந்த ஒரு திட்டத்திலும், அல்லது ப்ராஜெக்ட்டிலும் ஈடுபடமாட்டார்கள். இந்த பெஞ்ச் சைஸ் பணியாளர்கள் ரிசர்வ் பணியாளர்களாக இருப்பார்கள்.