22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீது ஒருவிதமான கவர்ச்சி உள்ளது. கூடவே இது ஒரு உறுதியான முதலீட்டு வழிமுறையாகவும் உள்ளது. உலக அளவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கு இதுவே காரணம்.


இந்தியாவில் தங்கத்தின் மீது வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, அதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது.


இதனால்தான் வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து தங்கம் வாங்குகிறார்கள். அங்கு தங்கத்துக்கு வரி கிடையாது.


வரி இல்லாத காரணத்தால் இந்தியாவை ஒப்பிடும்போது அங்கு தங்கத்தின் விலை மிகவும் குறைவாக உள்ளது. தங்கத்தின் குறைவான விலை அனைவரையும் ஈர்க்கிறது.


2025 மார்ச் 5 ஆம் தேதியன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 83,670 ரூபாயாக இருந்தது. அதேசமயம் இந்தியாவில் அதன் விலை 87,980 ரூபாய்.


வெளிநாட்டில் இருந்து வரும்போது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்கம் கொண்டு வந்தால் அது குறித்து விமான நிலையத்தில் தகவல் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அது கடத்திலின் கீழ் வந்துவிடும்.


தங்கத்தை வெளிநாட்டில் இருந்து எடுத்து வரும்போது அதுகுறித்து விவரங்களை விமான நிலையத்தில் சமர்பிக்க வேண்டும், அதற்கான ரசீதையும் வைத்திருக்க வேண்டும்.


வெளிநாட்டில் இருந்து ஒரு ஆண் 20 கிராமும், ஒரு பெண் 40 கிராம் தங்கமும் கொண்டு வரலாம். அதற்கு சுங்க வரி கிடையாது.


தங்கம் கொண்டு வருவதற்கான கட்டணத்தை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) நிர்ணயித்துள்ளது.


கட்டணம் செலுத்தி எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் கொண்டு வர முடியுமா?
15 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் 40 கிராம் தங்கம் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது. இதற்கு உறவுமுறை குறித்த சான்றை அளிக்க வேண்டும்.


பாஸ்போர்ட் சட்டம் 1967 இன் படி இந்திய குடிமக்கள் அனைத்து வகையான தங்கத்தையும் (நகைகள், தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள்) கொண்டு வரலாம்.