22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

அல்ட்ராவொய்லெட் (Ultraviolette), மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற ஆரம்பித்திருக்கும் பெங்களுரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம். கடந்த சில வருடங்களாகவே எஃப்77 என்கிற விலையுயர்ந்த எலக்ட்ரிக் பைக் (Electric Bike)-ஐ மட்டுமே விற்பனை செய்துவந்த அல்ட்ராவொய்லெட் நிறுவனம், அதிரடியாக குறைந்த விலையில் ஒரு எலக்ட்ரிக் பைக்கையும், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-ஐயும் அறிமுகம் செய்து மார்க்கெட்டை தெறிக்கவிட்டது. இதில் அல்ட்ராவொய்லெட் டெசராக்ட் (Tesseract) எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு விற்பனையில் போட்டியாக உள்ள மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


விற்பனையில் போட்டியாக உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பார்ப்பதற்கு முன்னர் அல்ட்ராவொய்லெட் டெசராக்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி பார்ப்போம். ரூ.1.20 லட்சத்தில் அல்ட்ராவொய்லெட் அறிமுகம் செய்துள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெசராக்ட் ஆகும். இந்த விலையில் நிறைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டாலும், டெசராக்ட் அவற்றை காட்டிலும் அளவில் பெரியதாக உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.1.20 லட்சம் என்பது முதல் 10,000 கஸ்டமர்களுக்கு மட்டுமே. அதன்பின் விலை அதிகரிக்கப்படும்.


3.5 kWh, 5 kWh மற்றும் 6 kWh என 3 விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக 20.1 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கும். வழக்கமான பிளாட்ஃபாரத்தில் இருந்து முற்றிலும் புதிய பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்ட டெசராக்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பின்வரும் அதன் போட்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எவ்வாறு சமாளிக்க போகின்றன என்பதை பார்க்க ஆவலாக உள்ளோம்.


ஓலா எஸ்1 புரோ + (Ola S1 Pro +):


ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் விலைமிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டராக எஸ்1 புரோ+ விற்பனை செய்யப்படுகிறது. 4 kWh மற்றும் 5.3kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் இந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 242கிமீ மற்றும் 320கிமீ ரேஞ்சை பெறலாம். பேட்டரியை பொறுத்து, ஸ்கூட்டர் இயக்கக்கூடிய டாப்-ஸ்பீடும் வேறுபடுகிறது.


ஏத்தர் 450 அபெக்ஸ் (Ather 450 Apex):


அல்ட்ராவொய்லெட் டெசராக்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் இந்த ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் ஒன்றாகும். இதில் பொருத்தப்படும் 3.7kWh பேட்டரி ஆனது அதிகபட்சமாக 157 கிமீ தொலைவிற்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கொண்டு செல்லக்கூடியது ஆகும். அதிகபட்சமாக 100மஅph வேகத்தில் இயங்கக்கூடிய 450 அபெக்ஸின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.1.99 லட்சம் ஆகும்.


ஹீரோ விடா வி2 புரோ (Hero Vida V2 Pro):

இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்பின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்று இதுவாகும். ரூ.1.15 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.9மறூ திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்த ரேஞ்ச் 165 கிமீ ஆகும்.


ரிவர் இண்டி (River Indie):


விசித்திரமான தோற்றத்தின் மூலமாக பிரபலமாகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவாகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்படும் 4kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகபட்சமாக 161 கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த ரிவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.43 லட்சம் ஆகும்.


குறிப்பு:


அல்ட்ராவொய்லெட் டெசராக்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக இத்தனை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டாலும், அவற்றை எல்லாம் அளிவல் பெரியதான தோற்றத்தின் மூலமாக டெசராக்ட் முந்துகிறது. இந்த புதிய அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சமாக அதன் குறைவான விலையை பார்க்கிறோம்.
இதன் காரணமாகவே இந்த இ-ஸ்கூட்டரை பலரும் விரும்பி வாங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.