NewsOne Tamil Nadu
Spread the love

“சுதந்திர வர்க்கத்தின் ஆதரவாளராகவும், நிலையான உலகளாவிய சக்தியாகவும் தன்னை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பு, சீனாவுக்கு திறந்தே உள்ளது.


ஆனால் அது எளிதானதல்ல. ஏனெனில் சீனாவின் மீது சர்வதேச வர்த்தக நெறிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, 2020 -ல் ஆஸ்திரேலிய ஒயின் இறக்குமதிகளுக்கு 200 சதவீதத்துக்கும் மேற்பட்ட சுங்க வரி விதித்தது.


சீனாவும், அமெரிக்காவுக்கு அப்பால் பார்க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா இன்னும் சீனாவின் ஏற்றுமதி தொடர்பான பட்டியலில் முதன்மையான இடத்தில் உள்ளது.


கனடா மற்றும் மெக்சிகோவுக்கு பிறகு, அமெரிக்க ஏற்றுமதிகளுக்கான மூன்றாவது பெரிய சந்தையாக சீனா உள்ளது. மேலும் ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவுடனான சீன வர்த்தகம் வளர்ந்து வருகிறது.


ஆனால், உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதாரங்கள் ஒன்றையொன்று சார்ந்திருப்பதை நிறுத்திக் கொள்ளும் என்பதைக் கற்பனை செய்வது கடினம்தான்.
அரசின் ஆதரவு, நிகரற்ற விநியோகச் சங்கிலி, குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் ஆகியவற்றின் காரணமாக இது நடந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


“உலகமயமாக்கல், சீனாவின் வணிகச் சார்பு கொள்கைகள், சந்தைத் திறன் ஆகியவை தொடக்கத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க உதவியதாக” ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


அதைத் தொடர்ந்து அரசு தனது முயற்சியை அதிகரித்தது, பரந்த சாலைகள் மற்றும் துறைமுகங்களை அமைப்பதில் அதிகளவில் முதலீடு செய்து, மூலப்பொருட்களை கொண்டு வரவும், சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை உலகத்திற்கு எடுத்துச் செல்லவும் உதவியது.
அத்துடன், சீன யுவான் நாணயம் மற்றும் அமெரிக்க டாலருக்கு இடையிலான நிலையான மாற்று விகிதமும் உதவியது.


சமீபத்திய ஆண்டுகளில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை நோக்கிய மாற்றம், சீனா தொடர்ந்து சந்தையில் நீடிப்பதையும், அதன் போட்டியாளர்களைவிட வேகமாக முன்னேறுவதையும் உறுதி செய்துள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.


சீனா ஏற்கனவே ஓர் உற்பத்தி சக்தியாக இருந்து பெரும் பொருளாதார செல்வாக்கைக் கொண்டுள்ளது. ஆனால் டிரம்பின் சுங்க வரிகள் உலக நாடுகளுடனான அமெரிக்காவின் உறவை உயர்த்துவதால், அதற்கு ஓர் அரசியல் வாய்ப்பும் உள்ளது.