
தேசியவாதத்தை விட மனிதநேயம் ஏன் முக்கியம் இல்லை?
சூடானில் நடந்து வரும் நெருக்கடி ரவீந்திரநாத் தாகூரின் ‘தேசபக்தி நமது இறுதி ஆன்மீக புகலிடமாக இருக்க முடியாது, என் அடைக்கலம் மனிதநேயம். நான் வைரங்களின் விலைக்கு கண்ணாடி வாங்க மாட்டேன். நான் வாழும் வரை தேசபக்தி மனிதகுலத்தை வெல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்ற மேற்கோளின் சாராம்சத்தில் என்னை மீண்டும் ஒருமுறை வியக்க வைத்துள்ளது.
பல மாதங்களாக நடைபெற்ற மக்கள் பேரணிகளுக்குப் பிறகு, ஏப்ரல்2019 இல் அப்போதைய ஜனாதிபதி ஒமர் அல் பஷீரை பதவி நீக்கம் செய்த பின்னர், சூடானின் இரானுவத் தலைமையகத்திற்கு வெளியே இருந்த ஒரு போராட்ட முகாமை உடைக்க சூடான் பாதுகாப்புப் படைகள் நேரடி வெடிமருந்துகள் மற்றும் கண்ணீர்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி நகர்ந்தன. நாட்டின் பிற நகரங்களிலும் உள்ளிருப்புப் போராட்டங்களில் இதேபோன்ற ஒருங்கிணைந்த ஒடுக்குமுறைகள் நடந்தன. சூடான் மருத்துவர்களின் மத்தியக் குழுவின் கூற்றுப்படி நடவடிக்கையின் முடிவில், குறைந்தது 100பேர் கொல்லப்பட்டனர். பலர் கொடூரமாகத் தாக்கப்பட்டு காயமடைந்தனர், மேலும் சிலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இறந்த உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சிலர் நைல் நதியில் வீசப்பட்டனர். இடைக்கால இராணுவ கவுன்சில் இந்த எண்களை மறுத்து, இறப்பு எண்ணிக்கை 40 என்று கூறியது. அதே நேரத்தில் பாலியல் வன்கொடுமை பற்றி எதுவும் கூறவில்லை.
ஓம்டுர்மானின் சில பகுதிகளில் வழக்கமாக இராணுவம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கார்ட்டூமின் சில பகுதிகளில் விரைவான ஆதரவுப்படைகளைச் சேர்ந்த அதிக ஆயுதமேந்திய துணை ராணுவத்தினர் ரோந்து சென்றதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
சூடானின் தற்போதைய நிலைக்கு ‘நரகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது ஒரு பயங்கரமான குறைத்து மதிப்பிடலாக இருக்கும். ஆனாலும், இந்த நரகம் மக்களின் இதயங்களை பிளக்கத் தவறிவட்டது, ஒரு சில கண்ணீரைக் கூட அடக்கத் தவறிவிட்டது. உலகெங்கிலும் உள்ள பிரபலங்களின் மிக அற்புதமான நடவடிக்கைகள் கூட எண்ணற்ற செய்தி சேனல்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பது திகைப்பூட்டும் வகையில் உள்ளது. ஆனால் மனிதகுலத்தை என்றென்றும் சிதைத்துள்ள RSF இன் இந்த கொடூரமான செயல் அதே தீவிரத்துடன் வெகுமதி பெற இன்னும் பலவற்றை இழிவுபடுத்த வேண்டியிருக்கலாம்.
மேலும், இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதல்களின் போது ஏற்ப்பட்ட சூழ்நிலைகளையும் சூடானில் தற்போதைய சூழ்நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்படுகிறது. உதாரணமாக, புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு எனது பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்களை நான் கண்டேன்., ஆனால் ‘காட்டுமிராண்டித்தன எதிர்ப்பு’ அல்லது ‘வன்முறை எதிர்ப்பு’ கோஷங்களை எங்கும் நான் காணவில்லை. நம் சொந்த நாட்டிற்குள் (அது உலகில் எந்த நாடாக இருந்தாலும்) ஏதாவது தீமை நடந்தால், அது நம் ஆன்மாவைத் துண்டாக்கி, கோபத்திலும் எரிச்சலிலும் முழ்கடிக்கிறது. ஆனால் இதேபோன்ற ஒன்று வேறு ஏதேனும் நாட்டில் நடக்கும்போது, அது அதே தாக்கத்தை ஏற்படுத்த் தவறிவிடுகிறது.
ஏன் வேறு எந்த நாட்டிலும் பயங்கரவாதம் நடக்கும்போது அது வேறுபட்டதா? வெவ்வேறு தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு நடக்கும்போது அது கொடூரமானதாக இல்லையா? பயங்கரவாதம் குறித்த நமது பார்வை ஓரளவு புறநிலை இயல்புடையதாகிவிட்டது. நாம் இந்தியர்கள் என்பதற்கான தொடர்ச்சியான நினைவூட்டல்கள் உள்ளன. ஆனால் நாம் முதலில் மனிதர்கள் இல்லையா? நம் நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும்போது அது நம்மை பயமுறுத்துகிறது, ஆனால் வேறு ஏதேனும் ஒரு நாடு பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும்போது அது நம்மை பயமுறுத்துவதில்லை. நாம் ஒன்றாக நின்று ஒரே குரலில் தேசிய கீதத்தைப் பாடும்போது நாம் போதுமான அளது தேசியவாதிகள், ஆனால் சர்வதேச அளவில் நம் இதயங்கள் ஒரே தாளத்தில் துடிக்கும் அளவுக்கு, ஒன்றாக நின்று மக்களுக்காக அனுதாபம் கொள்ளும் அளவுக்கு நாம் மனிதர்களா?