
ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த உலகளவில், கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள கார் நிறுவனங்களில் ஒன்று. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் ஸ்கோடா கார்கள் விற்பனை பெரியதாக இல்லை ஆனால், ஐரோப்பிய நாடுகளில் நன்கு வலுவாகவே உள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுக்க 9 லட்சத்திற்கும் அதிகமான கார்களை ஸ்கோடா விற்பனை செய்துள்ளது. ஸ்கோடாவுக்கு வழக்கம்போல், ஐரோப்பாவில் தான் அதிக கஸ்டமர்கள் கிடைத்துள்ளனர் என்றாலும், அதனைத் தாண்டி எதிர்பாராத ஒரு பகுதியில் இருந்தும் ஸ்கோடாவுக்கு கஸ்டமர்கள் தொடர்ச்சியாக குவிந்த வண்ணம் உள்ளனர். அதனை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

உலகின் மிக பழமையான ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஸ்கோடா ஆட்டோவும் ஒன்றாகும். சுமார் 130 வருடங்களாக ஆட்டோமொபைல் வாகனங்களின் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்துக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாகவே அமைந்துள்ளது. ஏனெனில், ஒரே வருடத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனை என்பதெல்லாம் சாதாரணமான விஷயம் அல்ல. “ஆயிரக்கணக்கான பேர் ஏற்கனவே இந்த காரை வரிசையாக வாங்கிட்டு வராங்க! கார் கம்பெனி செய்த ஒரு சிறிய மாற்றம்” சரியாக துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த 2024-ல் உலகம் முழுக்க மொத்தம் 9 லட்சத்து 26 ஆயிரத்து 600 கார்களை ஸ்கோடா விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2023-ஆம் ஆண்டை காட்டிலும் 6.9% அதிகமாகும்.

கார்கள் விற்பனையில் ஸ்கோடா கண்டுள்ள இந்த வளர்ச்சிக்கு வழக்கம்போல் ஜெர்மனி நாடு தான் பெரிதும் உதவியாக இருந்துள்ளது. செக் குடியரசு நாட்டு கார் நிறுவனமாக இருப்பினும், ஆட்டோமொபைலின் பிறப்பிடமாக கருதப்படும் ஜெர்மனியில் தான் ஸ்கோடா நிறுவனத்துக்கு பெரிய மார்க்கெட் இருந்து வருகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 1 லட்சத்து 87 ஆயிரத்து 100 கார்களை ஜெர்மனியில் ஸ்கோடா விற்பனை செய்துள்ளது. இது 2023-ல் ஜெர்மனியில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கோடா கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 29 ஆயிரத்து 200 அதிகமாகும்.

அதேநேரம், ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களுக்கு மத்தியில் உள்ள மத்திய கிழக்கு நாடுகளிலும் கடந்த 1 வருடத்தில் ஸ்கோடா கார்களின் விற்பனை பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் போன்ற அரபு நாடுகளில் ஸ்கோடா கார்களை பலரும் விரும்பி வாங்குகின்றனர். அதிலும் குறிப்பாக, குவைத் நாட்டில் ஸ்கோடா கார்கள் விற்பனை ஆனது 2023ஐ விட கடந்த ஆண்டில் சுமார் 62% அதிகரித்துள்ளது. இதனால், இந்த 2025-ஆம் ஆண்டிலும் இந்த நிலையை தொடர, மத்திய கிழக்கு நாடுகளுக்கு என சில பிரத்யேகமான திட்டங்களை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தயார் செய்து வைத்துள்ளது.

அவற்றுள், புதிய தொழிற்சாலைகளுக்கான திட்டங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்கோடா கார்களை பொருத்தவரையில், கடந்த ஆண்டில் அப்டேட் செய்யப்பட்ட ஆக்டோவியா (Octavia) கார் ஸ்கோடா நிறுவனத்தின் விற்பனையில் பெரும் பங்கு வகிக்கிறது. கடந்த வருடத்தில் மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 700 ஆக்டேவியா கார்களை உலகின் பல நாடுகளில் ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது, 2023-ல் விற்பனை செய்யப்பட்ட ஆக்டேவியா கார்களின் விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் 12.4% அதிகமாகும்.

கடந்த 2024-ல் குஷாக் மோண்டே கார்லோ என்கிற முற்றிலும் புதிய காரை அறிமுகம் செய்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம், கரோக், காமிக் மற்றும் ஸ்காலா போன்ற கார்களின் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் (Facelift Upgrade) வெர்சன்களையும் கடந்த ஆண்டில் அறிமுகம் செய்தது. மத்திய கிழக்கு நாடுகளில் ஸ்கோடா நிறுவனத்தின் சிறந்த விற்பனை கார்களாக கோடியாக் (Kodiaq) மற்றும் குஷாக் விளங்குகின்றன.
குறிப்பு: ஸ்கோடா நிறுவனத்துக்கு மட்டுமல்லாமல், குவைத் நாடு பெரும்பாலான கார் கம்பெனிகளின் நம்பிக்கைக்குரிய மார்க்கெட்டாக மாறி வருகிறது. அதாவது, அந்த அளவிற்கு அந்த நாட்டில் கார்களின் விற்பனை, குறிப்பாக விலையுயர்ந்த கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், ஸ்கோடா நிறுவனத்துக்கு நம் நாடு எதிர்காலத்தில் மிகவும் உதவியாக விளங்கலாம்.