Notice: Function Elementor\Core\Experiments\Manager::warn_removed_or_hidden_dependency was called incorrectly. Feature mega-menu depends on hidden experiment nested-elements. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 4.3.5.) in /home/u416843817/domains/newsonetamilnadu.com/public_html/wp-includes/functions.php on line 6121
முதல் திரைப்படத்தை தயாரிக்க உள்ள நடிகை சமந்தா! - Newsone Tamilnadu
22 Tuesday, 2025
2:22 pm
உடனுக்குடன்
தமிழகத்தில் புதிய மழை எச்சரிக்கை பங்குச் சந்தையில் அதிகரிப்பு ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் புதிய திரைப்படம் 'கபாலி' வெளியீட்டு தேதி அறிவிப்பு
உடனுக்குடன்
5 இடைக்காலத் தடை
கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன! இப்ஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!
விராட் கோலி ஓய்வு அறிவிப்பு
5 இடைக்காலத் தடை
கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன! இப்ஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!

முதல் திரைப்படத்தை தயாரிக்க உள்ள நடிகை சமந்தா!

Spread the love

நடிகை சமந்தா விரைவில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஏற்கனவே சமந்தா நடித்த இரண்டு படங்களை இயக்கிய பிரபல பெண் இயக்குநர் தான் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.


தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் குறைவாகவே தோன்றியுள்ளார். உடல் நலகோளாறு காரணமாக, திரைத்துறையில் தனது கவனத்தை குறைத்து, சில வெப் தொடர்களில் மட்டுமே நடித்து வந்தார்.


இந்த சூழலில், சமந்தா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான “ட்ராலாலா மூவிஸ் பிக்சர்ஸ்” மூலம் முதல் முறையாக ஒரு திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். மேலும், இந்த படத்தில் அவரே கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டி, “சமந்தாவின் அடுத்த படத்தை இயக்குவது என் பெருமை” என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே சமந்தா நடித்த “ஜபர்தஸ்த்” மற்றும் “ஓ பேபி” ஆகிய படங்களை இயக்கிய அவர். மீண்டும் மூன்றாவது முறையாக சமந்தாவுடன் கூட்டணி அமைக்க உள்ளார்.