செயற்கை ஏஐ – இந்தியா சாதிக்குமா?

ஹிந்தி, மராத்தி, தமிழ் போன்ற பிராந்திய மொழிகளில் ஏஐ மாதிரிகளைப் பயிற்றுவிக்கத் தேவையான உயர்தர தரவுத் தொகுப்புகள் இல்லாததால், குறிப்பாக இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையின் அடிப்படையில், இந்தியா அனைத்து சவால்களையும் மீறி, திறமையின் அடிப்படையில் சிறப்பாகச் செயல்படுகிறது. ஏனெனில் உலகின் ஏஐ பணியாளர்களில் 15 சதவீதத்தினர் இந்தியாவை சேர்ந்தவர்கள். ஆனாலும், பிரச்சனை என்னவென்றால், ஏஐ திறமை உள்ளவர்களின் இடப்பெயர்வு குறித்த ஸ்டான்ஃபோர்டின் ஆராய்ச்சி, திறமையான வல்லுநர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதைக் காட்டுகிறது. ஏஐ மாதிரிகளை பழைய, குறைந்த […]
ஏர் இந்தியா – லுஃப்தான்சா கூட்டு

ஜெர்மானிய விமானச் சேவை நிறுவனம் லுஃப்தான்சா உடனான விமான எண் பகிர்வு (Codeshare) உடன்பாட்டை மேலும் 60 தடங்களுக்கு விரிவுபடுத்த உள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. அந்த 60 தடங்களில் சென்னை உள்ளிட்ட 12 இந்திய நகரங்களும் 26 ஐரோப்பிய நகரங்களும் அடங்கும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விமான நிறுவனங்கள் ஒரே விமான எண்ணைப் பயன்படுத்திக்கொள்ள ‘கோட்ஷேர்’ உடன்பாடு வழிவகை செய்கிறது. அதன்படி, ஒரு விமான நிலையத்திலிருந்து கிளம்பி, இன்னோர் விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து […]
துளசி – வழிபடும் முறை!

அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம். அதைப்போல் அலங்காரப் பிரியரான திருமாலுக்கு உகந்தது துளசி. திருமாலின் திருமார்பில் மாலையாக மகிழ்வோடு காட்சித் தருபவள் துளசி தேவி. துளசி என்ற சொல்லுக்கு தன்னிகரற்றது என்று பொருளாகும். துளசி செடியின் நுனியில் பிரம்மாவும், அடியில் சிவபெருமானும், மத்தியில் திருமாலும் வாசம் செய்வதாக ஐதீகம். அதனால்தான் துளசியை புனிதமாக வழிபடுகிறார்கள். துளசி பூஜை செய்தால் திருமணமாகாதப் பெண்களுக்கும் திருமணம் கைகூடும். கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தன்று துளசித்தாய் அவதரித்ததாகப் புராணங்கள் […]
டிராம்பா? இந்தியாவுக்கு எதிர்ப்பு!

இந்தியாவே அதிக வரி போட்டு, அதிக பணம் வைத்துள்ளார்கள். அவர்கள் நாட்டில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க நாங்கள் ஏன் ரூ.180 கோடி நிதி உதவி தர வேண்டும்? என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி கேட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் அரசின் செலவுகளை குறைக்க, உலக பணக்காரர் எலான் மஸ்க் தலைமையில் அரசின் செயல்திறன் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு கடந்த சில தினங்களுக்கு முன்பாக, இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.180 கோடி […]
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம்!

13 முக்கிய பொறுப்புகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் விற்பனை ஆலோசகர், நுகர்வோருக்கான ஆதரவு நிபுணர், சேவை மேலாளர், நுகர்வோர் மேலாளர், வணிக செயல்பாடு ஆய்வாளர், கடை மேலாளர், உதிரிபாகங்களுக்கான ஆலோசகர், வாடிக்கையாளர்களுக்கான மேற்பார்வையாளர் உள்ளிட்ட வேலைகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. டெஸ்லா நிறுவனத்தின் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பின்னால் பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றன. இந்தியாவில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய கடும் முயற்சிகளை டெஸ்லா நிறுவனம் மேற்கொண்டபோது, மத்திய அரசின் அதிகப்படியான […]
சுனிதாவை கைவிட்ட பைடன்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் விடப்பட்டதற்குப் பின்னால் அரசியல் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் தனியார் தொலைக்காட்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்பும், அரசு செயல்திறன் துறை தலைவர் எலான் மஸ்க்கும் பேட்டி அளித்தனர். அப்போது பேசிய டிரம்ப், சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்களை பைடன் கைவிட்டதாக குற்றம் சாட்டினார். பட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸ் ஆகிய விண்வெளி வீரர்களை மீட்க […]
மதராஸி என்ற டைட்டில் ஏன்? ஏ ஆர் முருகதாஸ் பேட்டி!

சிவகார்த்திகேயன் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் மதராஸி படத்தின் டைட்டிலும், க்ளிம்ப்ஸ் வீடியோவும் சிவகார்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்போது அந்தப் படம் குறித்து இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் படம் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். முதலில் இப்படத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் மதராஸி என்ற தலைப்பு பற்றி கூறிய முருகதாஸ் “இந்தக் கதை வட இந்திய கதாப்பாத்திரங்களின் பார்வையில் இருந்து துவங்குகிறது. மதராஸி என்ற பதம், வட இந்தியர்கள், தென் […]
தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதி இல்லை! மத்திய அரசு பாரபட்சம்

ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு மட்டும் ரூ.1,555 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம், கல்வி நிதியை தொடர்ந்து தற்போது பேரிடர் நிதியிலும் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் மிக்ஜாம் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகளும், பொதுமக்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்தது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 17 மற்றும் 18-ம் […]
இந்தியாவில் முதல் தனியார் தங்கச்சுரங்கம்!

இந்தியாவில் முதன்முதலாக ஆந்திராவில் தனியார் தங்கச்சுரங்கம் அமைகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரி பகுதியில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கடந்த 1994-ம் ஆண்டு கண்டறிந்தது. தங்கம் உள்ளதா? என ஆய்வு செய்ய பல கோடி முதலீடு செய்ய வேண்டும் என்பதால் எந்த தனியார் நிறுவனமும் ஆய்வுக்கு முன்வரவில்லை. இதையடுத்து 2005ம் ஆண்டு சுரங்க கொள்கை மாற்றி அமைக்கப்பட்ட பின், […]
வீழ்ச்சியில் ரிலையன்ஸ்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் திங்கள்கிழமை (செப்டம்பர் 30) பெரிய சரிவைக் கண்டன. இது இந்திய பங்குச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.31 சதவீதம் சரிந்து ஒரு பங்கின் விலை ரூ.2,953.15 ஆக இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.02 சதவீதம் சரிந்துள்ளன. இந்த சரிவுடன் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு இரண்டும் அழுத்தத்திற்கு உள்ளாகின. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் பெருமளவில் சரிந்ததால், பங்குச்சந்தை […]