22 Tuesday, 2025
2:22 pm

பெண்களுக்கு மாரடைப்பை முன்கூட்டியே கண்டறிய முடியும், ஆய்வில் தகவல்!

உலக அளவில் பெண்களின் இறப்புக்கு இதய நோய்களே முக்கிய காரணம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.இதய நோய் ஆபத்துகள் பெரும்பாலும் முன்கூட்டியே கண்டறியப்படாததும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்நிலையில் அமெரிக்கன் கார்டியாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் பெண்களுக்கு வரக்கூடிய இதய நோய் குறித்து முன்கூட்டியே அறிய முடியும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம். இதய நோய்கள் ஆண்களுக்கு மட்டுமே வரும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், […]

ஒரு வருடத்தில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்த தேஜாஸ் நெட்வொர்க்ஸ்…. கிடுகிடுவென சரிந்த பங்கு விலை…

2024-25ம் நிதியாண்டின் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் ரூ.71.80 கோடி நிகர நஷ்டம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.146.78 கோடி நிகர லாபமாக இருந்தது. இது நிறுவனத்தின் தொடர்ச்சியான 4 காலாண்டுகளாக லாபகரமாக இருந்த நிலையில் தற்போது நஷ்டம் அடைந்துள்ளது. தொலைத்தொடர்பு சாதனத் தயாரிப்பு நிறுவனமான டாடா குழுமத்திற்குச் சொந்தமான தேஜாஸ் நெட்வொர்க்ஸ், நான்காவது காலாண்டில் ரூ.71.80 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து அந்த பங்கின் விலை இன்று ஒரே […]

இந்திய மிடில் கிளாஸ் மக்கள்.. மிக பெரிய ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள்.. வல்லுனர் விடுத்த வார்னிங்

சென்னை: இந்தியாவில் மிடில் கிளாஸ் கடன் மோசமாக உள்ளது. அவர்கள் தங்களுக்கு வரப்போகும் ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள். தங்களுக்கு என்ன நடக்க போகிறது என்பது அவர்களுக்கு இன்னமும் தெரியவில்லை, என்று போர்ட்ஃபோலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனர் சவுரப் முகர்ஜி எச்சரித்து உள்ளார். போர்ட்ஃபோலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனர் சவுரப் முகர்ஜி விடுத்துள்ள எச்சரிக்கையில், உலகம் முழுக்க வேலை இழப்புகள் மோசமாகி வருகின்றன. இந்தியாவில் அந்த அளவிற்கு இல்லை. அதாவது […]

கேரட் ஆரஞ்சு வெள்ளரி பழ ஜூஸ் எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

கேரட் வெள்ளரி ஆரஞ்சு ஜூஸை எளிதாக தயாரித்துவிடலாம்.இது ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.கோடைக்காலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு இதனை கொடுத்தால் அவர்களது மனமும் குளிரும்,உடலும் குளிரும்.இதில் இனிப்பிற்காக சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.இது வெயில் காலத்தில் அனைவரும் அருந்தலாம் உடலிற்கு மிகவும் ஆரோக்கியமானதுஇதனை எவ்வாறு செய்யலாம் என்பதைப் பார்க்கலாம் Serving: 2 Main ingredient For the main dish Step 1: கேரட்,வெள்ளரிக்காய்,ஆரஞ்சு பழங்களை சிறிது சிறிதாக நன்கு நறுக்கி அதில் சிறிது உப்பு தேவைக்கேற்ப […]

பெண்களே, எலும்பு வலி, மூட்டுவலி பிரச்சனையால் அவதியா? தினமும் இந்த விஷயங்கள் செய்தாலே கட்டுப்படுத்திடலாம்!

வயதாகும் போது இயல்பாகவே மூட்டுவலி வருவது இயற்கையானது. ஆனால் இது ஆண்களை விட பெண்களிடம் அதிகமாக பார்க்கலாம். குறிப்பாக ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பு இருக்கும் போது அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே சிரமமாக இருக்கலாம். பெண்கள் தங்கள் இயக்கத்தை பராமரிக்கவும் வலி உணர்வை குறைக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும் நிலையில் ஈஸ்ட்ரோஜன் குறையும் நிலை உண்டாகும். இந்த ஹார்மோன் மாற்றங்கள் அசெளகரியத்தை உண்டு செய்யும் போது அது எலும்புகளில் அதிக […]

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாம்பழம்

மாம்பழம்… என்ன பேரைக் கேட்டாலே சும்மா நாக்கில் எச்சில் ஊறுகிறதா? இருக்காதா பின்னே. பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழமே. மிகவும் சுவையான மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது அல்ல. அதனுள் உள்ள மருத்துவ குணங்களை சொன்னால் ஆச்சரியப்பட்டு விடுவீர்கள். அத்தனை ஆற்றல் உள்ளது அதற்கு. மாம்பழம் பல நன்மைகளை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஏ மற்றும் பி6 போன்ற வைட்டமின்கள் உள்ளன. மேலும், இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. மாம்பழம் செரிமானத்தை மேம்படுத்துகிறது, […]

வாழைத்தண்டு சாப்பிடுங்க, உங்க உடம்புல இந்த மாற்றம் எல்லாம் உண்டாகும்!

கடுமையான வெயிலின் தாக்கத்தை குறைக்க முடியாது. ஆனால் வெப்பநிலை பாதிப்பை குறைக்க உணவு முறை சிறப்பாக உதவும். அந்த வகையில் இயற்கை நமக்கு பல்வேறு வகையான உணவுகளை கொட்டி கொடுத்துள்ளன. அதில் ஒன்று வாழைத்தண்டு. வெயில் காலம் முடியும் வரை தினமும் ஒரு கப் வாழைத்தண்டு சாப்பிட்டு வருவது வெப்பத்திலிருந்து உடலை காப்பாற்றுவதோடு இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளையும் உடலுக்கு அளிக்கும். அப்படியான நன்மைகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம். வாழைத்தண்டு பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. வாழைமரத்திலிருந்து […]

வைட்டமின் கே நிறைந்திருக்கிற உணவுகளைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க மக்களே

7 Vitamin K Foods To Eat for Better Health : வைட்டமின்கள் என்றாலே அது நம் உடலுக்குத் தேவையான அடிப்படையான ஊட்டச்சத்துக்கள் ஆகும். அதனால் தான் அவை உயிர்ச்சத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதில் வைட்டமின் கே ரத்த உறைதலைத் தடுப்பது தொடங்கி பல்வேறு உடல் பிரச்சினைகளைச் சரிசெய்யவும் உதவி செய்கிறது. அத்தகைய அத்தியாவசியமான வைட்டமின் கே சத்துக்கள் நிறைந்த சில முக்கியமான உணவுகள் பற்றி இங்கு பார்க்கலாம். அடிபட்ட இடங்களில் ரத்தம் வந்தாலும் அது வேகமாக […]

சத்தானபாசிப்பயறு சாலட் ரெசிபி எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்

மூங் தால் சாலட்டை (Moong Dal Salad) ஹெசர்பேலே கோசாம்பரி என்றும் கூறுவார்கள். இது மிகவும் வித்தியாசமான மற்றும் எளிமையான தென்னிந்திய சாலட் ஆகும்.இதில் கேரட் மற்றும் வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளும் சேர்க்கப்படுகின்றன. இதில் தேங்காய் சேர்ப்பது கோசம்பரியின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும், மேலும் இதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்ப்பதால் இந்த சாலட்டின் சுவையை அதிகரிக்கிறது. இந்த சுவையான ஆரோக்கியமான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். Serving: 2 Main ingredient For tempering For […]

உடல் எடை வேகமாக குறையணும்னா இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

இரவு உணவு உடலுக்கு மிக முக்கியம். இரவு உணவு ஆரோக்கியமானதாக எடுத்துக் கொள்ளும்போது தான் அது நல்ல தூக்கத்தையும் உடல் எடையைச் சீராக வைத்திருக்கவும் உதவி செய்யும். நம்மில் பெரும்பாலானவர்கள் இரவு உணவு என்றாலே தோசை, சப்பாத்தி என்று தான் சாப்பிடுகிறோம். ஆனால் இரவு உணவு புரதங்கள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் ஆகியவை சேர்ந்ததாக இருக்க வேண்டும். அப்படி சாப்பிடும்போது உடல் எடையும் கட்டுப்பாட்டுக்குள் வரும், மெட்டபாலிசமும் சீராக இருக்கும். அப்படி பெஸ்ட் 5 […]