துளசி – வழிபடும் முறை!

அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம். அதைப்போல் அலங்காரப் பிரியரான திருமாலுக்கு உகந்தது துளசி. திருமாலின் திருமார்பில் மாலையாக மகிழ்வோடு காட்சித் தருபவள் துளசி தேவி. துளசி என்ற சொல்லுக்கு தன்னிகரற்றது என்று பொருளாகும். துளசி செடியின் நுனியில் பிரம்மாவும், அடியில் சிவபெருமானும், மத்தியில் திருமாலும் வாசம் செய்வதாக ஐதீகம். அதனால்தான் துளசியை புனிதமாக வழிபடுகிறார்கள். துளசி பூஜை செய்தால் திருமணமாகாதப் பெண்களுக்கும் திருமணம் கைகூடும். கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தன்று துளசித்தாய் அவதரித்ததாகப் புராணங்கள் […]
வேதையை ஆளும் வேதாரண்யேஸ்வரர்!

காவிரி நதிக்கரையில் ஆதித்ய சோழனால் கட்டப்பட்ட கோயில்களில் வேதாரண்யேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். இந்தக் கோயில் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. வேதாரண்யேஸ்வரர் கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள், கோயிலின் வரலாறு மற்றும் வேதாரண்யம் நகரத்தைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கின்றன. இந்தக் கல்வெட்டுகள், சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், கோயிலுக்கு பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டதைக் குறிக்கின்றன. கோயில் – கட்டிட அமைப்பு வேதாரண்யம் சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. கருவறை கிழக்கே நோக்கியது. […]