தல தோனியை சந்திக்க மிகுந்த ஆர்வம் – ஜடேஜா பேட்டி!

ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம்க்கு ஜடேஜா வந்து சேர்ந்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் ஜடேஜா நேரடியாக துபாயில் இருந்து […]
தோனிக்கு பொறாமை? ரோஹித் சர்மா – ரசிகர்கள் குற்றச்சாட்டு!

விராட்கோலியும், ரோகித் சர்மாவும் நான்கு ஐசிசி கோப்பைகளை வென்று அதிக ஐசிசி கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் என்ற சாதனையை படைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான தோனி, டெஹ்ராடூன் சென்றிருந்த நிலையில் அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி வென்றிருக்கிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்டனர். அதற்கு தோனி கோபமாக இங்கிருந்து விலகி செல்லுங்கள் என்பது போல கையை காட்டினார். சாம்பியன்ஸ் […]
ஜோகோவிச் ஓய்வு எப்பொழுது?

ஜோகோவிக் விரைவில் ஓய்வை அறிவிக்கும் வாய்ப்பு அதிகம் என்றே சொல்லப்படுகின்றது. அவரின் ஓய்வு குறித்து வதந்திகள் பரவிக்கொண்டே வருகின்றன. ஆனால் ஜோகோவிக் ஓய்வு குறித்தான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார். இரண்டு விஷயங்களால் நான் தொடர்ந்து விளையாட விரும்புகின்றேன் என கூறியிருக்கின்றார் நோவக் ஜோகோவிக். முதல் காரணம் டென்னிஸ் விளையாட்டின் மீது நான் கொண்ட காதல். டென்னிஸ் விளையாட்டின் மீது கொண்ட அதிக காதலால் நான் இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாட விரும்புகின்றேன் என்றார் ஜோகோவிக். மற்றொரு காரணமாக […]
ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா!

சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்…ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்தவர்…களத்தில் நின்று விட்டால் எதிரணி சின்னாபின்னமாவது உறுதி.. என்ற புகழுரைக்குச் சொந்தக்காரர் ரோகித் சர்மா.. ஆனால், சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டிக்கு முன்பு வரை, லீக் ஆட்டங்களில் 41, 20 மற்றும் 10 ரன்களும், அரையிறுதியில் 28 ரன்களையும் மட்டுமே எடுத்தார் ரோகித் சர்மா. இதனால், அவரது ஃபார்ம் குறித்து முன்னாள் வீரர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். இது ஒருபுறம் இருக்க, ரோகித் […]
முகமது ஷமி – உலக சாதனை!

பந்துவீச்சில் ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளார் முகமது ஷமி. அதுமட்டுமல்லாமல், வேகமாக 200 விக்கெட்டுகளை எட்டிய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஷமி பெற்றார். 102 போட்டிகளில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க், அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். ஷமி, 104 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி 2-வது இடத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்டாக்குடன் இடத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த 200 விக்கெட்டுகளை வீழ்த்த ஷமி […]
கிரிக்கெட் தான் தனக்கான பி.ஆர்.ஏஜெண்ட் – ரஹானே பேட்டி!

ரஹானே, கிரிக்கெட் தான் தனக்கான பி.ஆர்.ஏஜெண்ட் என்று கூறியுள்ளது அதிசயிக்க வைக்கிறது. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறும்போது, நடந்து முடிந்த பார்டர். கவாஸ்கர் டிராபியை வீட்டில் உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சியில் பார்த்தது மிகவும் வேதனையாகவும், கடினமாகவும் இருந்தது என்று கூறியுள்ளார். “நான் ரொம்ப கூச்ச சுபாவியாகவே இருந்தேன். அதிகம் பேச மாட்டேன். என் கவனமெல்லாம் கிரிக்கெட் தான், கிரிக்கெட் ஆடு, வீட்டுக்குப் போ என்பதுதான் என் தாரக மந்திரமாக இருந்து வந்தது. […]
மகளிர் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் யார்? யார்?

மகளிர் ஐபிஎல்கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு Women’s League என்ற பெயரில் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. பெண்கள் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு, குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், உபி வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 5 அணிகள் விளையாடுகின்றன. மகளிர் ஐபிஎல்லின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. மகளிர் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் யார்?யார்? அதிக சொத்து மதிப்பு கொண்ட அணி எது? என்பது குறித்து பார்ப்போம். டெல்லி […]
உலகத்தரம் வாய்ந்த வீரர் – கோலி!

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை பாகிஸ்தான் நாட்டில் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. நாளை மறுதினம் இந்திய அணி, வங்கதேசத்துடன் விளையாடுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நேருக்கு நேர் விளையாடுகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் பந்து […]
சாம்பியன்ஸ் டிராபி தகவல்கள்

இந்த சாம்பியன்ஸ் டிராபி, தொடர் ஒருநாள் போட்டி ஃபார்மெட்டில் நடத்தப்படுகிறது. 2008-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டது, ஆனால் பாதுகாப்பு காரணங்களால் எந்த அணியும் விளையாட முன்வரவில்லை என்பதால் 2009-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் அந்த தொடர் நடத்தப்பட்டது. 2021-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டடது. ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக அது பின்னர் டி20 உலகக் கோப்பையாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. 2023-ஆம் ஆண்டு உலகக் […]
முதலிடத்தை பிடித்த சுப்மன் கில்!

ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில், சுப்மன் கில் 796 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். பாக்.வீரர் பாபர் அஸம் 773 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு சரிந்துள்ளார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா 761 புள்ளிகளுடன் மாற்றமின்றி, 3-ம் இடத்தில் தொடர்கிறார். தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசன் 756 புள்ளிகள் பெற்று 4-ம் இடத்திலும் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 740 புள்ளிகளுடன் 5-ம் இடத்திலும் உள்ளனர். இந்திய அதிரடி வீரர் விராட் கோஹ்லி 727 புள்ளிகளுடன் மாற்றமின்றி […]