22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் யாரை நம்பி களமிறங்குகிறது, அணியின் பலம் என்ன மற்றும் பலவீனம் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக தெரிந்து கொள்வோம்.


IPL 2025 ராஜஸ்தான் ராயல்ஸ் ஆடும் லெவன்:
ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்கி 2 மாதங்கள் வரையில் நடைபெறுகிறது. ஐபிஎல் தொடர் என்றாலே பெரும்பாலும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி தான் பேசப்படுகிறது. ஏனென்றால், அவர்கள் முறையே 6 மற்றும் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். அதிலேயும், தோனி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சிறந்த கேப்டன்களாக அணியை வழிநடத்தியிருக்கின்றனர்.


ஆனால், இதில் ஒரு அணி முதல் சீசனில் 2008-ல் சாம்பியன் பட்டம் வென்றது. MI மற்றும் CSK பற்றி எல்லோரும் பேசிக்கொண்டிருந்த போது, RR நேரடியாக கோப்பையை வென்றது. இருப்பினும், ராஜஸ்தானுக்கு அதுவே முதல் மற்றும் கடைசி சீசனாக இருந்தது. அதன் பிறகு ஒரு சீசனில் கூட ராஜஸ்தான் ராயல்ஸ் டிராபியை கைப்பற்றவில்லை. அணியில் எத்தனையோ கேப்டன்கள் வந்து சென்றாலும் ராஜஸ்தானின் ஐபிஎல் டிராபி ஃபீவர் மட்டும் குறைந்தபாடில்லை. இந்த சீசனில் அணி வலுவாக உள்ளது. சுசு அணியின் ஆடும் லெவன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்.


ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சு கடந்த சில சீசன்களில் அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்துள்ளார். 2022-ல் சஞ்சு அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஆனால், குஜராத்திடம் தோல்வியடைந்தார். அந்த சீசனில் அணி சிறப்பாக விளையாடியது. இருப்பினும், சஞ்சுவின் உடற்தகுதி குறித்து கவலைகள் உள்ளன. ஆனால், அவர் விரைவில் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


RR அணியின் பேட்டிங்கை பார்த்தால், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. வைபவ் 13 வயதான இளம் வீரர். இருப்பினும், அவரது சமீபத்திய ஃபார்ம் சிறப்பாக உள்ளது. அவர் மீது அனைவரின் பார்வையும் இருக்கும். சஞ்சு 3-வது இடத்தில் விளையாடுவார். மிடில் ஆர்டரில் ரியான் பராக், துருவ் ஜுரேல், ஷிம்ரன் ஹெட்மயர், நிதிஷ் ராணா ஆகியோர் உள்ளனர். ஆல்ரவுண்டர்களாக ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகியோரும் உள்ளனர்.


சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சைப் பற்றி பேசுகையில், வேகப்பந்து வீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஃபசல்ஹக் ஃபரூக்கி, க்வென் மஃபகா மற்றும் ஆகாஷ் மத்வால் ஆகியோர் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் மஹேஷ் தீக்ஷனா மற்றும் வனிந்து ஹசரங்கா போன்ற வீரர்கள் உள்ளனர்.